தூண்டிவிடும் ஸநாதனிகள்! – குப்பைக் கோழியார்

2 Min Read
- Advertisement -

“ஸநாதன தர்மத்தை விமர்சிக்கலாம்; ஆனால், கிறிஸ்துவத்தையும், இஸ்லாத்தை யும் தான் விமர்சிக்கக் கூடாது” ஏன்னா ஸநாதன தர்மம் விமர்சனங்களைத் தாங்கும். அப்படின்னு கிண்டலாகச் சொல்ற மாதிரி சொல்லிருக்காரு காலட்சேபக்காரர் துஷ்யந்த் சிறீதர்னு ஒருத்தர்.

‘ஸநாதன தர்ம’த்தை ஒரு மதம் அப்படிங்கிற அளவில விமர்சிக்கும்போது, நாத்திகம்ங்கிற அடிப்படையில் விமர்சிக் கும்போது, எல்லா மதங்களையும் விமர்சிக்கலாம். ஆனால், அது மட்டுமா ஸநாதனத்தோட பிரச்சினை? அதில இருக்கிற பேதம், இழிவு, தீண்டாமை தானே ஸநாதனத்தோட அடிப்படை. அதையெல்லாம் விமர்சிச்சா, எவ்வளவு நேக்கா பிரச்சினையைத் திசைதிருப்பி விடுறானுங்க… கேட்கும்போது நியாயம் மாதிரியே தோணும்ல.. அதில தான் காலங்காலமா வாழ்றானுக!

வேறு மதத்தவர்களையும், இந்து மதத்தை விமர்சிக்கிறவர்களையும், இந்து மத வெறியர்கள், ஸநாதன பார்ப்பனர்கள் என்னவெல்லாம் செஞ்சிருக்காங்கன்றதுக்கு வரலாற்றுக் காலம் முதல் கவுரி லங்கேஷ் காலம் வரை ஏராளமான உதாரணங்கள் இருக்கு.

சரின்னு இந்த வீடியோவைப் பார்த் துட்டு, ஸ்வைப் பண்ணப்போ, அடுத்து சே.இளங்கோவன்ங்கிறவரு எழுதின கண்ணுல பட்டுச்சு. அப்படியே தர்றேன். படிங்க… இந்த ‘டைவர்சன்’ கம்பெனிய ஒரு புடி புடிங்க.

“ஸநாதன தர்மத்தை விமர்சிக்கலாம். ஆனால், கிறிஸ்துவத்தையும் இஸ்லாத்தை யும்தான் விமர்சிக்க முடியாது’ என்கிறார் துஷ்யந்த் சிறீதர். அவர் சொல்வதில் அப்படியோர் எள்ளல். இது எப்போது பேசப்பட்டதோ, நான் இப்போதுதான் கேட்டேன்.

சும்மா கிடக்கிற சங்கை ஊதிக் கெடுக்கிற மாதிரி, எனக்குச் சிறிதும் தொடர்பே இல்லாத மற்ற மதங்களை வம்புக்கிழுக்கும்படி என்னைத் தூண்டி விடுகிறார் என்றே தோன்றுகிறது.

இந்துவான என்னைச் சூத்திரன் என்றும் சண்டாளன் என்றும் தீண்டத்தகாதவன் என்றும் சொல்வது மற்ற மதங்கள் அல்ல. ஸநாதனம்தான் அப்படிச் சொல்லுகிறது. அதனால்தான் அதை நான் கேள்வி கேட்கிறேன்; விமர்சிக்கிறேன். மற்ற மதங்கள் என்னை இழிவுபடுத்தினால் கட்டாயம் அதையும் விமர்சிப்பேன். அப்படிச் செய்யாதபோது, அவற்றை ஏன் நான் வம்புக்கிழுக்க வேண்டும்? சநாதனவாதிகள் அதற்குத்தான் வலைவிரிக்கிறார்கள் என்று தோன்றுகிறது.

கிறிஸ்துவ மதத்திற்குள் ஏகப்பட்ட விமர்சனங்கள் உண்டு. அதனால்தான் அதில் பல பிரிவுகள். இஸ்லாத்திற்குள்ளும் விமர்சனங்கள் உண்டு. அவரவரும் அவரவர் மதத்திலுள்ள குறைகளைச் செப்பனிட்டுக் கொண்டு வாழ்கிறார்களே தவிர, பிற மதங்களுக்குள் மூக்கை நுழைப்பதில்லை. அப்படிச் செய்வது மத நல்லிணக்கத்தைக் குலைப்பதன்றி வேறில்லை.

இதைத்தான் சநாதனிகள் விரும்பு கிறார்கள். சொந்த மதத்துக்காரன் கேட்கும் கேள்விகளுக்கு அவர்களிடம் பதிலில்லை. குறைகளைத் திருத்திக் கொள்ளவும் தயாரில்லை. காரணம், குறைகளைக் குறைகள் என்று ஒப்புக் கொள்ளவே அவர்கள் தயாரில்லை. நால்வருணமே ஸநாதனத்தின் அஸ்திவாரம். அதை எப்படி விட்டுக் கொடுக்க முடியும்? அதனால்தான் சாமர்த்தியமாக விஷயத்தைத் திசைதிருப்பி விடுகிறார்கள். நல்ல வேளையாக, ஸநாதனிகளை நாம் முழுமையாகப் புரிந்து கொண்டு உஷாராக இருக்கிறோம்.”

உஷாராக இல்லைன்னா வட நாடு மாதிரி இங்கயும் கலவரத்தைத் தூண்டுவிட்டு விடும் இந்த பார்ப்பனக் கூட்டம்!

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *