பூசணியை உடைத்தால் திருஷ்டி கழியுமா?

1 Min Read
- Advertisement -

புதுக்கோட்டை, அக்.21 “ஆயுத பூஜை என்றாலே சாலையில் பூசணிக்காய் உடைப்பதுதான்” என்ற மூடப்பழக்கம், மீண்டும் தலைதூக்கத் தொடங்கியிருப்பது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக விழிப்புணர்வு ஏற்பட்டு, பலரும் தங்கள் வீட்டின் வாசலிலோ அல்லது நிறுவனங்களின் வாயில்களிலோ மட்டுமே பூசணிக் காய் உடைத்து வந்தனர். ஆனால், தற்போது இந்த விழிப்புணர்வு திசையை மாற்றி, மீண்டும் பொதுச் சாலைகளை ஆபத்தான விபத்துச் சாலைகளாக மாற்றும் அவலம் அரங்கேறி வருகிறது.

புதுக்கோட்டையில் நடந்த நிகழ்வில்,  சாலையில் பூசணி உடைத்து விட்டுத் திரும்பியவர், அதனால் விபத்துக்குள்ளான இருசக்கர வாகன ஓட்டிகளைப் பார்த்து, “திருஷ்டி சுற்றிப் போட்டிருக்கிறேனே, கண் தெரியவில்லையா?” என்று எரிச்சலோடு கேட்ட காணொலி, நம் சமூகத்தின் விழிப்புணர்வு எங்கு சென்று கொண்டிருக்கிறது என்ற கேள்வியை எழுப்புகிறது. அடுத்தவர் உயிரை ஆபத்தில் ஆழ்த்திவிட்டு, அதற்கு ஆன்மிகப் பெயரிடுவது எந்த வகையிலும் நியாயமல்ல.

கடவுள் நம்பிக்கை என்பது அவரவர் தனிப்பட்ட உரிமை. ஆனால், அந்த நம்பிக்கை மற்ற வர்களின் உயிருக்கும் உடமைக்கும் ஆபத்தாக மாறும்போது, அது வழிபாடாக இருக்க முடியாது; அநாகரிகமாக பொது இடத்துக்குத் தொல்லை தருவதோடு பொதுச் சாலைகளைச் சேதப்படுத்துபவர்கள் மீதும், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்துபவர்கள் மீதும் சட்டப் படி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

திருஷ்டி கழிக்க சாலைகளில் பூசணிக்காய் உடைப்பது மனிதர் களின் உயிரையே பறிக்கும் கொடூர மான திருஷ்டியாக மாறிவிடக் கூடாது. சாலைகள் வாகனங்கள் செல்வதற்கானவை, சடங்குகள் நடத்துவதற்கானவை அல்ல என்று மற்றவர்களுக்கு புரியும் அளவு தண்டனைகள் இருக்கவேண்டும் என்பதே ஆர்வலர்களின் கேள்வி யாக உள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *