புதுடில்லி, அக்.21 டில்லியில் நடைபெறவுள்ள ராம்லீலா நிகழ்வில் ராவணன், மேகநாதன் மற்றும் கும்பகர்ணன் ஆகியோ ரின் உருவ பொம்மைகளுடன் இந்தாண்டு 30 அடி உயரமுள்ள ’கரப்பான் பூச்சி’ உருவ பொம்மை யும் எரிக்கப்படவுள்ளதாம்.
‘தூய்மை இந்தியா’ ‘தூய்மை டில்லி’ போன்ற பிரச்சாரங்களை மேற்கொள்ளும் விதமாக ‘அசுத்தம் மற்றும் அழுக்கை’ குறிக்கும் கரப்பான்பூச்சியின் உருவ பொம்மையை எரிக்கவுள்ளதாக ராம்லீலா நிகழ்வை ஏற்பாடு செய்த சிறீ கேசவ் ராம்லீலா கமிட்டி தெரிவித்துள்ளது.
அக்கமிட்டியின் தலைவரும், பாஜக சட்டமன்ற உறுப்பின ருமான அசோக் கோயல், இதில் அரசியல் உள்நோக்கம் எதுவு மில்லை என்று கூறினார்.
இதற்காக, அங்கு வைக்கப் பட்டுள்ள கரப்பான் பூச்சி உருவ பொம்மையின் காணொலி சமூக ஊடகங்களில் பரவிய நிலையில், ‘இலவச விளம்பரத்திற்கு நன்றி’ என கரப்பான் பூச்சி மக்கள் கட்சியின் (சிஜேபி) நிறுவனர் அபிஜீத் தீப்கே தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக சமூக ஊடகங்களில் பரவிய காணொ லியைப் பகிர்ந்து, இலவச விளம் பரத்திற்கு நன்றி என அபிஜீத் குறிப்பிட்டிருந்தார். சிஜேபி சட்ட வல்லுநர் ரத்னா சிங் இதனை ஒரு நாடகம் என்று குறிப்பிட்டார்.
டில்லியில் சிஜேபி நடத்தி வரும் போராட்டங்களுக்கு மத்தியில் இந்த உருவ பொம்மை எரிப்பு விவகாரம் நடைபெறுகிறது. முன்னாள் ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு எதிராகப் போராட்டம் நடத்திய சிஜேபி, தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகவேண்டும் என தற்போது போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், ஆளும் அரசு தரப்பில் அவர்களுக்கு எதிர்ப்பு வலுத்துள்ளது.
ஒரு மத நிகழ்வில் இவ்வாறு மதத்திற்கு அப்பாற்பட்ட கரப்பான் பூச்சி உருவ பொம் மையை எரிப்பதற்கும், அரசியல் நிகழ்வுகளுடன் கலக்கப்படு வதற்கும் சமூக ஊடகங்களில் பலரும் விமர்சனங்களை எழுப்பி வருகின்றனர்.
