திரு.வி. கல்யாண சுந்தரம் (முதலியார்) அவர்கள் 1933 ஈரோட்டில் அன்னை நாகம்மை யாரின் உருவப் படத்தை திறந்து வைத்த போது கூறியதாவது:
( நூல் :தமிழர் தலைவர் – ஆசிரியர் :சாமி சிதம்பரனார் – பக்கம் 47)
“தமிழ்நாட்டில் உள்ள அரசியல்வாதிகள் அனைவரும் நாகம்மையாரைப் பற்றி நன்கறிவார்கள். சீர்திருத்தவாதிகள் அனைவரும் நன்குணர்வார்கள். ஈவேராவின் அரசியல் சமூக எதிரிகளும் அம்மை யாரிடம் மதிப்பும் அன்பும் பாராட்டி வந்தனர்.
ஈவேராவின் பொது வாழ்க்கைக்கு காரணம் அம்மையாரின் அருங்குணங்கள் என்பதை எவரும் மறுக்க முடியாது. செல்வச் செழிப்பில் மூழ்கிக் கிடந்த அம்மையார் தேசநலத்தின் பொருட்டு அச்செல்வங் களை எல்லாம் உதறித் தள்ளிவிட்டார். அம்மையார் ஏட்டுக்கல்வி அதிகம் பெறாவிடினும் உலக அறிவில் உயர்ந்து விளங்கினார். கணவனுடைய தேசத் தொண்டிற்கும் பின்னர் அவர் புரிந்த சமூக சீர்திருத்த தொண்டிற்கும் பெருந்துணையாய் தம் கணவருடன் ஒத்துழைத்தார். விருந்தோம்பலில் அம்மையாருக்கு இணையானவர் எவருமிரார். தம் இல்லத்திற்கு வரும் தொண்டர்களுக்கு இனிய முகத்துடனும், இன் சொல்லுடனும், இன்னமுது படைத்து வந்ததை எவரும் மறுத்து கூற முடியாது.
ஒரு சமயம் நானும் நாயக்கரும் திருநெல்வேலிக்கு பிரச்சார நிமித்தம் சென்று விட்டு ஈரோட்டுக்கு இரவு 12:30 மணிக்கு வந்தோம். அன்னம் கிடைக்குமோ கிடைக்காதோ என்று அய்யப்பாடு உடனே வந்தோம்.அப்பொழுது அம்மையார் அன்புடன் வரவேற்று உடனே அறுசுவையுடன் அமுது படைத்ததை யான் என்றும் மறவேன்! நாகம்மையாரும் ராமசாமியும் இறுதி வரையிலும் வாழ்ந்த வாழ்வு இன்பகரமான தாகும். அது எல்லோராலும் பாராட்டக் கூடியதாக இருந்தது.
பெண் மக்களை பொதுக்கூட்டங்களுக்கு அழைத்து வருவது, மாநாடுகளுக்கு அழைத்து வருவது, என்ற வழக்கத்தை தமிழ்நாட்டில் புகுத்தியவர் ஈ.வே.ரா அவர்களேயாவார்.
“காதலர் இருவர் கருத்தொருமித்து
ஆதரவு பட்டதே இன்பம் ”
என்னும் அவ்வையார் சொல்லுக்கு இவர்கள் வாழ்க்கையே எடுத்துக்காட்டாகும். என்று வெளிப் படையாக அம்மையார் அவர்களின் சிறப்பை பதிவு செய்துள்ளார்.
1933–க்கு பிறகும் இந்த குடும்பத்திற்கு ஈடாக தமிழ்நாட்டில் எந்த தலைவர் குடும்பமாவது உண்டா என்பதே நம் அய்யப்பாடு.
தகவல் : குடந்தை க. குருசாமி
