கருநாடகாவில் நடைபெற்றுவரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியின் போது, வாக்காளர் பட்டியலில் இருந்து தங்கள் பெயர்களை நீக்கக்கோரி தாக்கல் செய்யப்பட்ட ‘படிவம்-7′ விண்ணப்பங்களில் பெரும் குளறுபடிகளும், விசித்திர மான தகவல்களும் வெளியாகியுள்ளன.
கருநாடகாவில் குறைந்தபட்சம் 37 பேர், தேர்தல் ஆணையத்தின் படிவம்-7 அய்ப் பயன்படுத்தி, தாங்களே இறந்துவிட்டதாகக் கூறி வாக்காளர் பட்டியலில் இருந்து தங்கள் சொந்தப் பெயர்களை நீக்கக்கோரி விண்ணப்பித்துள்ளனர்.
இது ஒருபுறமிருக்க, 334 படிவங்களில் ஒருவரை யொருவர் இறந்துவிட்டதாகக் குறிப்பிட்டு மாறி மாறிப் படிவம் தாக்கல் செய்துள்ளனர்.
அதாவது, முதல் நபர் இரண்டாவது நபர் இறந்து விட்டதாகக் கூறி விண்ணப்பிக்க, அடுத்த நபர் முதல் நபர் இறந்துவிட்டதாகக் கூறி அதே போன்று விண்ணப்பித்துள்ளனர்.
இறந்தவர்கள் மற்றும் நிரந்தரமாக வேறு இடங்களுக்குச் சென்றவர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்குவதற்காகவே ‘படிவம்-7’ பயன்படுத்தப்படுகிறது. ஆனால், உயிருடன் இருப்ப வர்களே தங்களை இறந்துவிட்டதாகக் குறிப்பிட்டதும், ஒருவரையொருவர் இறந்துவிட்டதாகக் கூறி மனு தாக்கல் செய்ததும் தேர்தல் அதிகாரிகளிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
‘‘2029 ஆம் ஆண்டிற்கும் இந்தியா முழுவதும் சிறுபான்மையினர் மற்றும் இஸ்லாமியர்களை ஒட்டு மொத்தமாக வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கி அவர்களை அகதிகள் ஆக்கும் திட்டமிட்ட மோசடியா? என்ற கோணத்தில் இது குறித்து தீவிர விசாரணைகள் மேற்கொள்ளப்படவேண்டும்’’ என்ற உரிமைக் குரல் எங்கெங்கும் வெடித்துக் கிளம்பியுள்ளது. இந்தப் பிரச்சினை காரணமாக அடுத்த மக்களவைத் தேர்தலில் (2029) பி.ஜே.பி. பெரும் தோல்வியைச் சந்திக்கும் என்கிற கருத்து மேலோங்கி நிற்கிறது.
உயிருடன் இருக்கும் வாக்காளர்கள், தாங்கள் இறந்துவிட்டதாக விண்ணப்பித்துள்ளார்கள் என்பது எல்லாம் நகைச்சுவையைத் தாண்டி, திட்டமிட்ட சதியைத்தான் வெளிப்படுத்துகிறது.
‘‘எனக்குப் பைத்தியம் தெளிந்துவிட்டது, உலக்கை யைக் கொண்டு வா, கோவணம் கட்டிக் கொள்கிறேன்’’ என்று சொன்னானாம்!
அதையும் தாண்டிய ஒரு வேலையைத் தேர்தல் ஆணையம் செய்துள்ளது.
மக்களை எத்தகைய மடையர்கள் என்று நினைத்தி ருந்தால், உயிருள்ளவர்களே, தாங்கள் செத்துவிட்டதாக விண்ணப்பம் கொடுத்ததாகத் தேர்தல் ஆணையம் அண்டப் புளுகு, ஆகாயப் புளுகுகளை அவிழ்த்துக் கொட்டும்!
சிந்திப்பீர்!
