தொகுதி மறுவரையறை மசோதாவை நிறைவேற்ற நாடாளுமன்ற சிறப்புக் கூட்டம்? இம்மாத இறுதியில் நடத்த ஒன்றிய அரசு திட்டம்

2 Min Read
- Advertisement -

புதுடில்லி, அக்.19 மக்களவை, மாநில சட்டமன்றங்களில், மகளிருக்கு, 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் வகையில், 2023இல், மகளிர் இட ஒதுக்கீடு சட்டத்தை தேஜ கூட்டணி அரசு நிறைவேற்றியது. 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பு, தொகுதி மறுவரையறை ஆகியவற்றுக்கு பின்னரே, இந்த சட்டத்தை அமல்படுத்த முடியும்.

இந்த சூழலில், 2029 மக்களவைத் தேர்தலுக்குள் மகளிர் இட ஒதுக்கீடு சட்டத்தை அமல்படுத்த திட்டமிட்ட ஒன்றிய அரசு, 2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்பு அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்யவும் முடிவு செய்தது. தொகுதி மறுவரையறை முன்னெடுக்க, அரசியலமைப்பு 131ஆவது சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும். இதற்கு மக்களவை, மாநிலங்களவையில் மூன்றில் இரு பங்கு ஆதரவு பெறுவது கட்டாயம். மசோதாவுக்கு தி.மு.க., காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ், சமாஜ்வாதி உள்ளிட்ட எதிர்க்கட்சி எதிர்ப்பு தெரிவித்தன.

தொகுதி மறுவரையறை மசோதா, ஏப்ரலில் மக்களவையில் ஒன்றிய அரசு அறிமுகப்படுத்தியது. விவாதத்தின் முடிவில், மூன்றில் இரு பங்கு ஆதரவு கிடைக்காததால் மசோதா தோல்வி அடைந்தது. ஜூலை, ஆகஸ்டில் நடந்த மழைக்காலக் கூட்டத்தொடரில், தொகுதி மறுவரையறை மசோதா மீண்டும் கொண்டு வரப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது; ஆனால் நடக்கவில்லை.

அதே சமயம், ஆக., 13 உடன் முடிந்த அந்த கூட்டத்தொடர், இதுவரை அதிகாரப்பூர்வமாக ஒத்திவைக்கவில்லை. போதுமான எண்ணிக்கை திரட்டி, இந்த மசோதாவை மீண்டும் நிறைவேற்றவே, சபைகளை ஒன்றிய அரசு ஒத்தி வைக்கவில்லை என கூறப்படுகிறது.

தொகுதி மறுவரையறை மசோதா  நிறைவேற்ற முயற்சியில் ஒன்றிய அரசு மீண்டும் இறங்கியது. இம்மாத இறுதியில் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடர் நடக்கவுள்ளதாகவும், இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளி யாகும் என்றும் கூறப்படுகிறது.

மக்களவையில் 543 உறுப்பினர்கள் உள்ளனர்; மூன்று இடங்கள் காலியாக உள்ளன. மக்களவையில் தேஜ கூட்டணிக்கு, 318 உறுப்பினர்கள் உள்ளனர். மசோதாவை நிறைவேற்ற, மூன்றில் இரு பங்கு பெரும்பான்மை அதாவது, 360 ஓட்டுகள் தேவை.  இதனால், பாஜவுக்கு இன்னும், 20 மக்களவை உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படுகிறது. மாநிலங்களவை யில் மொத்தமுள்ள, 245 இடங்களில், மூன்று இடங்கள் காலியாக உள்ளன. 240 பேரில் தேஜ கூட்டணிக்கு, 153 மாநிலங்களவை உறுப்பினர்கள் உள்ளனர். மசோதாவை நிறைவேற்ற, 162 மாநிலங்களவை உறுப்பினர்கள் தேவை. இதனால், பாஜவுக்கு சிறிய கட்சிகளைச் சேர்ந்த, 9 மாநிலங்களவை உறுப்பினர்கள் தேவைப்படுகின்றனர்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *