புதுடில்லி, அக். 19- ஆறு மாதங்கள் வரையிலான குழந்தைகளுக்கான உணவுப் பொருட்களில் சுக்ரோஸ் (Sucrose) மற்றும் பிரக்டோஸ் (Fructose) ஆகிய இனிப்புச் சத்துகளைச் சேர்ப்பதை முற்றிலும் தடை செய்ய இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் பரிந்துரைத் துள்ளது.
குழந்தைகளின் ஆரம்பகால ஆரோக்கியம் மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது.
‘உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய (குழந்தைகளுக்கான ஊட்டச் சத்தான உணவுகள்) ஒழுங்குமுறைகள் 2020’ விதிகளில் முக்கிய திருத்த வரைவை வெளியிட்டுள்ளது.
தற்போதைய நடைமுறைப்படி, கார்போஹைட்ரேட் தேவைக்காக குறிப்பிட்ட வரம்பிற்குள் சுக்ரோஸ் அல்லது பிரக்டோஸ் சேர்க்க அனுமதி உண்டு. ஆனால், இனி வரும் புதிய விதிகளின்படி இதற்கு முழுமையான தடை விதிக்கப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
குழந்தைகளின் வாழ்க்கையின் தொடக்கத்திலேயே அவர்கள் கூடுதல் சர்க்கரையை உட்கொள்வதைக் கட்டுப் படுத்துவதும், ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தை உருவாக்குவதுமே இதன் முக்கிய நோக்கம் என ஒன்றிய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் தெரிவித் துள்ளது.
60 நாட்கள் கால அவகாசம்
இந்த வரைவு திருத்தம் குறித்து பொதுமக்கள், மருத்துவ நிபுணர்கள் மற்றும் தொடர்புடைய வணிக நிறுவனங்கள் தங்களது கருத்துகள், ஆலோசனைகள் மற்றும் ஆட்சே பனைகளை 60 நாட்களுக்குள் உணவுப் பாதுகாப்புக்குத் துறைக்குச் சமர்ப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆரம்பகட்டக் குழந்தைகளுக்கான உணவில் சர்க்கரையின் அளவைக் குறைப்பது அவர்களின் எதிர்கால ஆரோக்கியத்திற்கு பெரும் உதவியாக இருக்கும் என சுகாதார வல்லுநர்கள் இத்திட்டத்தை வரவேற்றுள்ளனர்.
