புதுடில்லி, மே 9 விஜய் கட்சி யுடன் காங்கிரஸ் கூட்டணி வைத்தது ஒழுக்கக்கேடு என காங்கிரஸ் மூத்த தலைவர் மணிசங்கர் கடுமையாக சாடியுள்ளார்.
தமிழ்நாட்டில் விஜய் தலைமை யிலான தமிழக வெற்றிக்கழகத்துடன் காங்கிரஸ் கட்சி கூட்டணி குறித்து மணிசங்கர் கூறியதாவது:
100 ஆண்டுகளுக்கு முன்பு, 1925 நவம்பரில், காந்தியார் தனது குஜராத்தி இதழான நவ்ஜிவனில் வாயிலாக சுயராஜ்யம் என்பது அறநெறி சார்ந்த அரசாக இருக்க வேண்டும் என்ற கட்டளையைப் பிறப்பித்தார்.
கடந்த தேர்தலில் திமுக உடன் இருந்த நிலையில் தற்போது கூட்டணியை விலக்கி கொண்டு, தவெக உடன் இணைந்ததன் மூலம், காந்தியாரின் கட்சியான காங்கிரஸ் இந்தக் கட்டளையை மீறியுள்ளது.
இது போன்ற சந்தர்ப்பவாத அரசியல், முன்னேற்றத்திற்கான வழி அல்ல. இந்த முடிவில் ஒருவித அரசியல் சாதுர்யத்தனமும் அடங்கியுள்ளது. ஏனெனில், திமுக கூட்டணியிலிருந்து விலகுவதன் மூலம், கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளும் விலகிவிடுவார்கள் என்று நினைத்த நிலையில், ஆனால் அவர்களில் யாரும் விலகவில்லை. தற்போது காங்கிரஸ் ஒரு நிச்சயமற்ற சூழலில் தனித்து விடப்பட்டு இருக்கிறது.
விஜய் கட்சியுடன் இணைந்த ஒழுக்கக்கேட்டை நாம் செய்து விட்டோம்; இது அறிவான செயலா, நல்ல அரசியலா, அல்லது நல்ல ஒழுக்கமா? இந்த வகையான சந்தர்ப்பவாத அரசியல் எந்த அளவுகோலைப் பூர்த்தி செய்கிறது?
ஒரு தொங்கு சட்டமன்றம் உருவாகியுள்ளது, நாம் அந்தரத்தில் தொங்கிக்கொண்டிருக்கிறோம். இந்த வகையான அரசியலால் காங்கிரஸ் கட்சி முன்னேற முடியும் என்று நான் நினைக்கவில்லை. இவ்வாறு மணிசங்கர் கூறினார்.
