மதுரையில் நடைபெற்ற தந்தை பெரியார் பிறந்த நாள் விழா பேச்சுப்போட்டி மாணவச்செல்வங்களின் “மனத்திறப்புகள்”

2 Min Read
- Advertisement -

மதுரை, அக். 18- “அருமை! அருமை! அருமை! என்று மகிழ்ந்து கொண்டாடும் வகை யில் அமைந்திருந்தன மதுரை மாணவச்செல்வங்களின் சிற்றுரைகள்.

தந்தை பெரியார் அவர்களின் 148-ஆம் ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு 10.10.2026 அன்று மதுரையில் நடத்தப்பட்ட சமூக நீதி நாள் விழா பேச்சுப் போட்டியில் கலந்து கொண்ட இருபால் மாணவர்களின் சிற்றுரைகள் நம் மனதைச் சிலிர்க்கவைத்தன என்பது மிகையல்ல.

* பெண்களுக்கான சிந்திக் கும் தன்மையை மறுத்துவிட்டு அவள் முன்னேறவில்லை என்பது சரியா? என்ற பெரியாரின் சாட்டையடியை சமூகத்தின் முன் வீசினார் மாணவி தேவதர்ஷினி.

* “தன்னுடைய கேள்வி களின் வழியாக ஒட்டுமொத்த தமிழ்நாட்டையே சிந்திக்க வைத்தவர் பெரியார் “ என்று பெருமிதம் பொங்கப் பேசினார் மாணவி கே.பிரவீனா.

* பெண் கல்வி கற்றால் அந்தக் குடும்பமே கல்வி கற்றதுபோல என்ற பெரியாரின் அறிவுரையை எடுத்துக் கூறினார் மாணவி துர்க்கா.

* சலுகை, இரக்கம் தேவையில்லை. பெண்களுக்கு உரிமைதான் வேண்டும் என்று முழங்கினார் மாணவி மு.ரா.ஷாலினி.

* சமூக வளர்ச்சியில் கல்வியே மிகப் பெரிய வளர்ச்சி என்று கவனப்படுத் தினார் மாணவி ஒயிலாசிறீவாணி.

* எதையும் கண்மூடி ஏற்காமல் அறிவியல் மனப் பான்மையுடன் வாழவேண்டும்-மனிதன் பிறப்பால் உயர்வ தில்லை என்பது போன்ற அய்யாவின் கருத்துகளை அடுக்கினார் மாணவி ரா.யுவசிறீ.

* கருத்துகளையும் கொள்கை களையும் எடுத்துரைத்ததோடு நில்லாமல் தன் குடும்பத்திலேயே கைம்பெண்ணுக்கு மறுமணம் செய்து வைத்ததும், தன் குடும்பத்துப் பெண்களை போராட்டங் களில் ஈடுபட வைத்ததும் தந்தை பெரியார் பெருமைப்படுத்தினார், மாணவர் சுதாநந்தன்.

* முத்தாய்ப்பாக ஜாதி என்பது ஒரு மனநிலை, அதை முற்றிலும் ஒழிப்பதற்கு மக்கள் பெரியார் என்னும் கருத்தியலை மனநிலையாகக் கொள்ளவேண்டும் என்ற மாணவி அறிவுக்கனியின் கருத்தும், பெரியாரைப் படித்தால் மாண்புள்ள மனிதனாக மாறலாம் என்ற மாணவி மு.மோனிஷாவின் கருத்தும் அரங்கத்தில் பெரும் கைதட்டலைப் பெற்றன.

*பள்ளிக்கூட மாணவ  – மாணவியர் களுக்கு இரண்டு பிரிவுகளாகவும், கல்லூரி மாணவ மாணவியர்களுக்கு ஒரு பிரிவாகவும், மதுரை மாநகர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் – பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் சார்பாக நடத்தப்பட்ட பேச்சுப்ப்போட்டியில் ஒவ்வொரு பிரிவுக்கும் 6, 000 ரூபாய் என்ற வகையில் மொத்தம் ரூ 18000 மதிப்பில் பணப்பரிசும் புத்தகங்களும் வழங்கப்பட்டன.

போட்டிக்கான ஏற்பாடுகளை தலைமைச் செயற்குழு உறுப்பினர் வே.செல்வம், பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற மாநிலச்செயலாளர் பாவலர் சுப.முருகானந்தம், பகுத்தறிவாளர் கழக மாவட்டத் தலைவர் ச.பால்ராசு, மாவட்டச் செயலாளர் வீர.பழனிவேல் ராசன், எல்.அய்.சி. செல்ல கிருட்டிணன், மாணவர் கழகச் சேர்ந்த சீ.தேவராஜ்பாண்டியன், விடுதலை நிழற்படக்கலைஞர் மதுரை ராதா ஆகியோர் செய்திருந்தனர்.

பகுத்தறிவாளர் கழக மாவட்ட அமைப்பாளர் பா.சடகோபன், பள்ளி ஆசிரியர் அழகுமீனாள் ஆகியோர் நடுவர்களாக இருந்து நிகழ்ச்சிகளை ஒருங் கிணைத்தனர்.

மூன்று முதல் பரிசுகளை பேரா சி.மகேந்திரன்-வெண் ணிலா குடும்பத்தினரும், மற்ற பரிசுத் தொகைகள், விழாவுக் கான நன்கொடைகளை மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் ச.பால்ராசு, செயலாளர் வீர.பழனிவேல்ராசன், எல்அய்சி செல்ல.கிருட்டிணன் , பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தின் மாநிலத் தலைவர் முனைவர் வா.நேரு, மாநிலச் செயலாளர் பாவலர் சுப.முருகானந்தம் அளித்து மகிழ்ந்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *