பெரியார் பேருரையாளர் பகுத்தறிவுப் புலவர் மா.நன்னன் வாழ்விணையர் திருமிகு பார்வதி நன்னன் மறைவு

1 Min Read

நமது வீரவணக்கம்

பெரியார் பேருரையாளர் பகுத்தறிவுப் புலவர்
மா. நன்னன் அவர்களின் வாழ்விணையர் திருமதி பார்வதி நன்னன் அவர்கள் (வயது 96) நேற்று (4.6.2026) இரவு தூக்கத்திலேயே காலமானார் என்ற செய்தி அறிந்து மிகவும் துன்பமும், துயரமும் அடைகிறோம்.
சுயமரியாதைச் சுடரொளி பேராசிரியர் மா. நன்னன் அவர்களின் வாழ்விணையர் என்பதுடன், அவரது கொள்கை வாழ்விற்குப் பெரிதும் துணை நின்றவர். இறுதி வரை பகுத்தறிவு நெறியில் குடும்பத்தினருடன் வாழ்ந்து காட்டிய கொள்கையாளருமாவார்.
நம் கொள்கைக் குடும்பங்களுடன் நன்கு பழகியவர் மட்டுமல்ல; முதிர்ந்த வயதிலும் பல்வேறு நிகழ்வுகளில் – உடல் நிலை அனுமதித்த காலம் வரை தவறாது கலந்து கொண்டு அனைவரிடமும் அன்பு செலுத்தி,நலம் விரும்பியவர் அன்பிற்குரிய அம்மையார் அவர்கள்.
நிறை வாழ்வு – அதுவும் கொள்கை வாழ்வு வாழ்ந்த அவரது மறைவு அவரது குருதிக் குடும்பத்தினருக்கு மட்டும் இழப்பல்ல; கொள்கை குடும்பத்தினருக்கும் ஏற்பட்ட சோகம் மிகுந்த இழப்புமாகும்.
அவரது மறைவால் பெரிதும் துயரமுறும் அவரது அன்பு மகள்கள் திருமதி வேண்மாள், அண்ணல், அவ்வை, மருமகன்கள் செம்மல், தமிழ்ச்செல்வன், பாரதி, பேரன், பேத்திகள் அறிவன், அணிமலர், மலர், கொள்ளுப் பேரன்கள் கவின், வினையன், அகில் மற்றும் குடும்பத்தினர் அனைவருக்கும் நமது ஆறுதல். மறைந்தவருக்கு ஆழ்ந்த இரங்கலுடன் நமது வீர வணக்கம்.

சென்னை தலைவர்,
5.6.2026 திராவிடர் கழகம்
குறிப்பு: தமிழர் தலைவர் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் தமது வாழ்விணையர் மோகனா வீரமணி, கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் ஆகியோருடன் இன்று காலை 9 மணிக்கு சென்னை சிறீநகர் காலனி – ரங்கராஜபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த திருமதி. பார்வதி நன்னன் உடலுக்கு மாலை வைத்து இறுதி மரியாதை செலுத்தினார். அம்மையாரின் இறுதி நிகழ்ச்சி இன்று மாலை 3.30 மணி அளவில் அவரது இல்லத்தில் இருந்து தொடங்கி கண்ணம்மாபேட்டை இடுகாட்டில் மாலை 4 மணிக்கு நடைபெற உள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *