முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ‘திராவிட மாடல்’ அரசின் திட்டங்களால்
தமிழ்நாட்டில் பயன்பெறாத குடும்பம் ஒன்றாவது உண்டா?
கிணத்துக்கடவு, சூலூர் தொகுதிகளில் கழகத் தலைவர்
கோவை, ஏப்.12 கடந்த 5 ஆண்டுகளில் ‘திராவிட மாடல்’ அரசு செய்த சாதனைகளைப் பட்டியலிட்டுப் பேசிவரும் திராவிடர் கழகத்தின் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள், ‘‘முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் ‘திராவிட மாடல்’ அரசின் திட்டங்களினால் தமிழ்நாட்டில் பயன்பெறாத குடும்பம் என்று ஒன்றாவது உண்டா?’’ என்றொரு ஆழமான கேள்வியைக் கேட்டு, அதற்கான பதில்களையும் தரவுகளுடன் சொல்லி, தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களுக்காக சூறாவளி சுற்றுப்பயணம் செய்து, மக்கள் மத்தியில் வாக்கு சேகரித்து வருகிறார்.
கிணத்துக்கடவு தொகுதி
தி.மு.க. வேட்பாளர்
கே.வி.கே.எஸ்.சபரி கார்த்திகேயன்,
சூலூர் தொகுதி தி.மு.க. வேட்பாளர்
தளபதி முருகேசன்
கோவை மாவட்டக் கழகத்தின் சார்பில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் கிணத்துக்கடவு தொகுதி தி.மு.க. வேட்பாளர் கே.வி.கே.எஸ்.சபரி கார்த்திகேயன், சூலூர் தொகுதி தி.மு.க. வேட்பாளர் தளபதி முருகேசன் ஆகியோருக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்கு சேகரிக்க, நேற்று (11.4.2026) மாலை 6.20 மணிக்கு முறையே மலுமிச்சம்பட்டி நான்கு முனை சந்திப்பு சாலையிலும், அதற்கடுத்து, பள்ளபாளையம் அண்ணா மன்றம் அருகில், இரவு 8.15 மணிக்கும் திராவிடர் கழகத்தின் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள், வாகனத்தின் மீது இருந்து வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டார். மலுமிச்சம்பட்டியில் கோவை மாவட்ட தலைவர் ம.சந்திரசேகர் தலைமையில், மாவட்டச் செயலாளர் வழக்குரைஞர் ஆ.பிரபாகரன் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். முன்னதாக, மாலை 5 மணிக்கு, மாநில கிராமப் பிரச்சார குழு அமைப்பாளர் முனைவர் அதிரடி க.அன்பழகன் தொடக்க உரையாற்றினார். தோழர்கள் ராஜன், ஏர்போர்ட் ராஜேந்திரன், மலுமிச்சம்பட்டி தி.மு.க. தோழர் செந்தில்நாதன் ஆகியோர் முன்னிலை வகித்து சிறப்பித்தனர். கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள், நிகழ்விடத்துக்கு 6.15 மணிக்கு வருகை தந்தார். அவருக்கு மாவட்டக் கழகம் மற்றும் கூட்டணிக் கட்சிகளின் சார்பில், எழுச்சிகரமான வரவேற்பு வழங்கப்பட்டது. நிறைவாக 6.20 மணிக்கு கழகத் தலைவர் உரையாற்றினார்.
கழகத் தலைவர் அவர்கள் எடுத்த எடுப்பிலேயே, ‘‘இது வழக்கமாக நடைபெறுகிற தேர்தல் இல்லை’’ என்பதைச் சுட்டிக்காட்டிப் பேசினார். அதாவது, ‘‘பாசிசத்தை கொள்கையாகக் கொண்ட பா.ஜ.க., இதுவரை இல்லாத அளவுக்கு, தமிழ்நாட்டில் காலூன்றுவதற்காக அ.தி.மு.க. என்ற பெரிய கட்சியின் தோளூன்றி நிற்கிறது’’ என்று அந்த ஆபத்தைச் சுட்டிக்காட்டி, இந்தத் தேர்தல் வழமையானது அல்ல என்பதைத் தெளிவாகப் புரிய வைத்தார்.
அடுப்பூதும் பெண்களுக்குப் படிப்பதற்கு? என்பதை மாற்றி முத்தமிழ் அறிஞர் கலைஞர்
இந்த அணியை எதிர்க்கின்ற தி.மு.க. தலைமை யிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி பற்றியும், அதன் சாதனைகள் பற்றியும் விவரித்தார். அடுப்பூதும் பெண்களுக்குப் படிப்பதற்கு? என்பதை மாற்றி முத்தமிழ் அறிஞர் கலைஞர் எரிவாயு அடுப்பு வழங்கி, புகை மூட்டத்தால் பெண்கள் அவதிப்பட்டதை மாற்றியதில் தொடங்கி, எட்டாம் வகுப்பு படித்திருந்தால் திருமணத்திற்கு உதவித்தொகை என்று அறிவித்து, படிப்படியாக பெண்களை மேல்நிலைக் கல்வி வரையிலும் கொண்டு வந்ததையும், தற்போது இருக்கும் ‘திராவிட மாடல்’ அரசு அதையும் தாண்டி, பெண்களை கல்லூரிக்கு கொண்டு வருவதற்காக, பல்வேறு திட்டங்களை அறிவித்து ஆண்களுக்கு நிகராக கல்வியில் பெண்களை மாற்றிய மாபெரும் சாதனையையும் விவரித்தார். அந்தச் சாதனைகளின் நீட்சியாக இப்போது தி.மு.க. அறிவித்திருக்கும் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள சாதனைத் திட்டங்களான, கூடுதல் மகளிர் உரிமைத் தொகை மற்றும் ரூ.8000–த்திற்கான கூப்பன், 5 ஆம் வகுப்பு வரையிலும் இருந்த காலை உணவு திட்டத்தை, எட்டாம் வகுப்பு வரை நீட்டித்திருப்பது உள்ளிட்ட
பல்வேறு வாக்குறுதிகளைச் சுட்டிக்காட்டி உரையாற்றினார்.
மேலும் அவர், ‘‘இப்படிப்பட்ட பெருமைகளை குலைக்கும் வண்ணம், ஒன்றிய அரசு நமக்குத் தரவேண்டிய நிதியை கொடுக்க மறுக்கின்றது’’ என்பதையும், ‘‘பேரிடர் நிதியைக் கூட தர மறுக்கின்றது’’ என்றும் ஒன்றிய அரசை அம்பலப்படுத்தினார். தொடர்ந்து, நம்மை ஏமாற்றுகின்ற ஆட்சி மறுபடியும் வந்தால்; உயர் ஜாதி ஏழைகளுக்கு இட ஒதுக்கீடு வழங்கும் சட்ட விரோத நடவடிக்கைகள்தான் தொடரும். இதையெல்லாம் எதிர்த்து நிற்கும் ஒரே முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் தான்!’’ என்பதை குறிப்பிட்டபோது, ஆரவாரமும், பலத்த கைதட்டல்களும் எழுந்து அடங்கின. அது ஓய்வதற்கு முன்பாகவே, ‘‘மு.க.ஸ்டாலின் ஆட்சியினாலே; ‘திராவிட மாடல்’ அரசின் திட்டங்களாலே தமிழ்நாட்டில் பயன்பெறாத குடும்பம் ஒன்றுண்டா?’’ என்று, ஓங்கிய குரலில் அடுத்தொரு கேள்வியை எழுப்பினார். கைதட்டல்களும், ஆரவாரமும் தொடர்ந்தன. இந்தப் பெருமைகளை எல்லாம் தலைகீழாக்குவதற்காக ஒரு முயற்சி நடப்பதைச் சுட்டிக்காட்டிப் பேசினார்.
‘‘அண்ணா தி.மு.க.வை அடமான தி.மு.க.வாக மாற்றி இருக்கிறார்கள்!’’
அதாவது, எதிர்க்கட்சியாக இருக்கக்கூடிய அண்ணா திமுக பற்றிக் குறிப்பிடும் போது, ‘‘அண்ணா தி.மு.க.வை அடமான தி.மு.க.வாக மாற்றி இருக்கிறார்கள்’’ என்று விமர்சித்தார். அதற்குச் சான்றாக அம்மையார் ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது, டில்லிக்காரர்கள் தமிழ்நாட்டுக்கு வந்ததையும், இன்று தமிழ்நாட்டில் இருந்து டில்லிக்குச் சென்று கொண்டிருப்பதையும், அம்மையார் அவர்கள், ‘‘மோடியா? இந்த லேடியா?’’ என்று துணிச்சலுடன் கேட்டதையும், இன்று, அமித்ஷா, ‘‘டில்லிக்கு ஓடியா?’’ என்றதும், அ.தி.மு.க.வினர், டில்லிக்கு ஓடுகின்ற அவலத்தையும் சுட்டிக்காட்டிப் பேசினார். நிறைவாக, தனக்கு 93 வயது ஆகிறது என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு பேசினார். அப்போது, மக்கள், ‘‘ஓ…’’ என்ற வியப்பொலியை ஒருமித்து எழுப்பியபடி, கழகத் தலைவரை இன்னமும் கூர்ந்து கவனித்தனர். அவரது குரலும், சுயமரியாதையைத் தூண்டுகின்ற அவரது சொற்களும் அவரை 93 வயதானவராக காட்டவில்லை.
கழகத் தலைவர் தொடர்ந்தார், ‘‘இந்த வயதில் நாங்கள் எதற்காக இப்படி அலைந்து திரிந்து கொண்டு பரப்புரை செய்கிறோம்? ஸ்டாலின் மறுபடியும் ஏன் முதலமைச்சர் ஆக வேண்டும் என்று உங்களிடம் வேண்டுகோள் விடுக்கிறோம்? ஸ்டாலினுக்காகவா? இல்லை, இந்த வேட்பாளருக்காகவா? இல்லை, எங்களுக்காகவா? இல்லை, உங்களுக்காக! உங்கள் சந்ததிகளுக்காக! உங்கள் சந்ததிகளின் நல்வாழ்வுக்காக!’’ என்று அடுக்கிக் கொண்டே… செல்லச் செல்ல, மக்களிடையே உணர்வுகள் பெருக்கெடுத்து ஓடின. அது அடங்குவதற்குள்… கழகத் தலைவர், ‘‘ஆகவே, உதயசூரியன் சின்னத்தில் வாக்களியுங்கள்’’ என்று வேண்டுகோள் விடுத்து, தனது உரையை நிறைவு செய்தார். கைதட்டல்களும், விசில்களும் அடங்குவதற்கு சில மணித்துளிகள் ஆயின.
தொடர்ந்து, மாநகரத் தலைவர் தி.க.செந்தில்நாதன் நன்றி உரை வழங்கி நிகழ்ச்சியை முறைப்படி நிறைவு செய்தார். அங்கிருந்து அடுத்த பரப்புரையை நிகழ்விடமான சூலூருக்கு விரைந்தார் கழகத் தலைவர்.
சூலூரில் தமிழர் தலைவர் ஆசிரியரின் தேர்தல் பரப்புரை
சூலூர் பரப்புரை நிகழ்விடத்துக்கு கழகத் தலைவர் இரவு 8.15 மணிக்கு வருகை தந்தார். மாவட்டக் கழகம் மற்றும் கூட்டணி கட்சிகளின் பொறுப்பாளர்கள், தோழர்கள், பொதுமக்கள் என அனைவரும் எழுச்சி கரமான வரவேற்பை வழங்கினர். நிகழ்ச்சிக்கு மாவட்டச் செயலாளர் வழக்குரைஞர் ஆ.பிரபாகரன் தலைமை தாங்க, மாவட்டத் தலைவர் ம.சந்திரசேகர் வரவேற்புரை ஆற்றினார். திராவிடர் கழகம், கூட்டணிக் கட்சிகளின் மாவட்டப் பொறுப்பாளர்கள் முன்னிலை வகித்து சிறப்பு செய்தனர். உரிய நேரத்துக்கு தி.மு.க. வேட்பாளர் தளபதி முருகேசன் வருகை தந்தார். நிறைவாக கழகத் தலைவர் வேட்பாளருடன் பரப்புரை வாகனத்தின் மீதிருந்து உரை நிகழ்த்தினார்.
தி.மு.க. தலைமையிலான
மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி– இது கொள்கைக் கூட்டணி!
அவர் தமது உரையில், ‘‘இந்தியாவில் நடைபெற்ற அனைத்துத் தேர்தல்களிலும் பங்கேற்றவன் நான். அந்த அனுபவத்தில் சொல்கிறேன், இந்தத் தேர்தலில் இரண்டு முக்கிய அணிகள்தான் இருக்கின்றன. ஒன்று, தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி! இது கொள்கைக் கூட்டணி! இந்தக் கூட்டணியின் சிறப்பு என்னவென்றால்? கல்விக்கண் திறந்த காமராஜரை ஆதரித்துக் கல்விப் புரட்சியை ஏற்படுத்தியது இந்த திராவிடர் இயக்கம் தான்! இந்த இயக்கம் தான் பெண்களின் கைகளில் இருந்த கரண்டியை தூக்கிப்போட்டு விட்டு, பேனாவை கொடுத்தது! இந்த இயக்கம் தான் இன்று காவல்துறையில் நம் பெண்களின் கைகளில் துப்பாக்கியை கொடுத்திருக்கிறது – சுடுவதற்காக அல்ல, மக்கள் பாதுகாப்புக்காக! இந்த இயக்கம் தான் ஓசையில்லாமல் சமூகத்தில் இப்படிப்பட்ட புரட்சியை செய்தது! இந்த சமுகப் புரட்சியை தான் தலைகீழாக மாற்றுவதற்கு இன்று இன்னொரு அணி முயற்சி செய்கிறது. அந்த அணி பா.ஜ.க. தலைமையில் இருக்கிறது. அது அ.தி.மு.க. தலைமையில் இல்லை. இதுதான் இரண்டாவது அணி’’ என்று இரண்டு அணிகள் எவையெவை? அந்த அணிகளின் தத்துவப் பின்னணி என்ன? என்பதைப் பற்றி எடுத்த எடுப்பிலேயே விவரித்து விட்டார். அதற்குப் பிறகு, இந்த இரண்டு அணிகளும் தேர்தல் களத்தில் எதை முன்னிலைப்படுத்துகின்றன என்பதை மக்கள் முன் வைத்தார். அதாவது, தி.மு.க. தலைமையிலான, மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி – ‘திராவிட மாடல்’ அரசு கல்வி, சுகாதார கட்டமைப்புகளில் செய்த மகத்தான சாதனைகளை முன்வைத்து மறுபடியும், ‘‘இதைத் தொடர்வதற்காக எங்களுக்கு வாக்களியுங்கள்’’ என்று, கேட்கிறது. மற்றொரு அணி, அவதூறுகளையும், பொய்களையும் மட்டுமே நம்பி களத்தில் நிற்கிறது என்பதைத் தெளிவுபடுத்தினார்.
அதையும் தாண்டி, ஒன்றிய அரசு தமிழ்நாடு அரசை, திராவிட மாடல் அரசை எப்படியெல்லாம் வஞ்சனை செய்தது என்பதற்கு நிதி ஒதுக்கீடு, மொழிக் கொள்கை, கல்விக் கொள்கை போன்றவற்றை சுட்டிக்காட்டி, அதையும் தாண்டி, தமிழ்நாடு அரசு எல்லா துறைகளிலும் முன்னணியில் இருப்பதைச் சுட்டிக்காட்டிப் பேசினார். மேலும் அவர், மகளிருக்காக கொண்டு வந்த திட்டங்களையும், சட்டங்களையும் எடுத்துரைத்தார். தொடர்ந்து அவர், ‘‘இதையெல்லாம் செய்திருக்கிற இந்த ஆட்சி மறுபடியும் வந்தால் தான், நமக்கு விடியல் கிடைக்கும்’’ என்றும் குறிப்பிட்டார். அடுத்து, திராவிடர் இயக்கத்தை வரலாறு நெடுக எதிர்த்தவர்களின் நிலை என்ன என்பதை நினைவூட்டினார். அதற்காக, ‘‘இங்கே அண்ணாமலை என்று ஒருவர் இருந்தார். இப்போது அவருக்கு நிற்பதற்கு ஓர் இடத்தை கூட ஒதுக்குவதற்கு அந்தக் கட்சியே தயாராக இல்லை’’ என்பதைக் குறிப்பிட்டு, திராவிடர் இயக்கத்தின் அருமையை, பெருமையை புலப்படுத்தினார்.
‘‘நானும் தலைகுனிய மாட்டேன்! தமிழ் நாட்டையும் தலைகுனிய விடமாட்டேன்’’ – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
மேலும் அவர், இன்றைய எதிர்க்கட்சித் தலைவர் – தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், மிசா காலத்தில் சிறையில் இருந்ததை திரித்துப் பேசியதை நினைவுபடுத்தி, ‘‘இஸ்மாயில் ஆணையம் என்று ஒன்று இருக்கிறது; அந்த ஆணையம் கொடுத்த ஓர் அறிக்கை இருக்கிறது! அது இவருக்குத் தெரியுமா?’’ என்றொரு கேள்வியை எழுப்பினார். தொடர்ந்து அவர், ‘‘எதிர்க்கட்சித் தலைவர் தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறார். அதற்கு காரணம், நீங்கள் தான்! அந்த அளவுக்கு நீங்கள் அரசியல் விழிப்புணர்வு பெற்று இருக்கிறீர்கள்’’ என்று பொதுமக்களையும் வாழ்த்தினார். அதே உணர்வை பிரதிபலிப்பதற்காகத்தான் தமிழ்நாட்டின் முதலமைச்சர், ‘‘நானும் தலைகுனிய மாட்டேன்! தமிழ் நாட்டையும் தலைகுனிய விடமாட்டேன் என்று சொல்லி வருகிறார்’’ என்பதையும் சேர்த்து குறிப்பிட்டார். அடுத்து, மோடி அரசு யார் யாருக்கெல்லாம் துரோகம் செய்தது? அதற்கு எப்படியெல்லாம் எடப்பாடியார் துணை போனார் என்பதையும் விளக்கிச் சொன்னார். மேலும் அவர், கோவைக்கு ஒன்றிய அரசு மெட்ரோ ரயிலை மறுத்ததையும் சுட்டிக்காட்டி, இவையெல்லாம் மாறுவதற்கு ‘திராவிட மாடல்’ அரசு தான் மறுபடியும் அமைய வேண்டும் என்பதை வேண்டுகோளாக வைத்து, தனது உரையை நிறைவு செய்தார்.
நிறைவாக, மாநகர மாவட்ட தலைவர் செந்தில்நாதன் நன்றி தெரிவித்து நிகழ்ச்சியை நிறைவு செய்தார்.
பங்கேற்றோர்
நிகழ்ச்சியில், மாவட்ட மகளிரணிச் செயலாளர் கலைச்செல்வி, ராஜேஸ்வரி, திலகமணி, கவிதா, தேவி, முத்து கணேசன், கணேஷ், வெற்றிச்செல்வன், சிவகுமார், தர்மன், ஆவின் சுப்பையா, அ.மு.ராஜா, மாநகர மாவட்டச் செயலாளர் புலியகுளம் வீரமணி, தொழிலாளரணிச் செயலாளர் வெங்கடாசலம், கோபாலகிருஷ்ணன், எட்டி மலை மருதமுத்து, தேனீஸ்வரி, பாக்கியம், பழனிச்சாமி, பெயிண்டர் குமார், மாவட்டத் துணைத் தலைவர் பழ.அன்பரசு, மலை ஆனந்த், ஆனந்தராஜ், வேலாண்டிபாளையம் பிரபு, ரங்கசாமி, ஆட்டோ சக்தி, ரமேஷ், கவுதமன், யாழினி, பெரியார் பிஞ்சு இயல் இசை மற்றும் தி.மு.க. தலைமையிலான கூட்டணிக் கட்சிப் பொறுப்பாளர்கள், தோழர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.