

‘‘மூடநம்பிக்காலு நிர்மூலன சமிதி’’ (MNS) (மூடநம்பிக்கைகள் ஒழிப்புச் சங்கம்) அமைப்பின் மூன்றாவது தேசிய மாநாடு இன்று (17.10.2026) காலை சென்னை பெரியார் திடலில் தொடங்கியது. திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ் முன்னிலையில் அவ்வமைப்பினர் தந்தை பெரியார் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர். பின்னர் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் முன்னிலையில் பெரியார் திடலில் தந்தை பெரியார் சிலைக்கு முன்பு, அவ்வமைப்பின் கொடியை ஆசிரியர் சுஜாதா ஏற்றினார். நடிகவேள் எம்.ஆர். ராதா மன்றத்தில் நடைபெறும் மாநாட்டைத் திராவிடர்கழகப் பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ் தொடங்கி வைத்து உரையாற்றியதுடன், எம்.என்.எஸ். அைமப்பின் தலைவர் டாக்டர் பைரி நரேஷுக்குச் சால்வை அணிவித்தும், கேடயம் வழங்கியும் சிறப்பித்தார். திராவிடர் கழகப் பொருளாளர் வீ. குமரேசன், துணைப் பொதுச் செயலாளர் ச. பிரின்சு என்னாரெசு பெரியார், மாநில கிராமப் பிரச்சாரக் குழு அமைப்பாளர் க. அதிரடி அன்பழகன் ஆகியோர் உடன் இருந்தனர்.
