விரைவாக பாஸ்போர்ட் வாங்கித் தருவதாகப் பணம் பறிக்கும் கும்பல் பொதுமக்களுக்கு சிபிஅய் எச்சரிக்கை

- Advertisement -

சென்னை, அக்.17 பாஸ்போர்ட் சேவைகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி பொதுமக்களிடம் பணம் பறிக்கும் மோசடிகள் அதிகரித்து வருவதால், மக்கள் மிகுந்த விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என மத்திய புலனாய் வுத் துறை (சிபிஅய்) எச்சரித்துள்ளது.

இது தொடர்பாக, சிபிஅய் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிவுறுத்தலில் கூறியிருப்பதாவது: பாஸ்போர்ட்டை விரைவாகப் பெற்றுத் தருவதாகவும், உடனடியாக நேர்காணலுக்கு ஏற்பாடு செய்வதாகவும் கூறி, பொதுமக்களிடம் சில கும்பல் பணமோசடியில் ஈடுபடு வதாக புகார்கள் வந்துள்ளன.

குறிப்பாக, அரசு இணையதளங் களைப் போலவே தோற்றமளிக்கும் போலி இணையதளங்கள் மூலம் விண்ணப்பக் கட்டணம், வங்கிக் கணக்கு விவரங்கள் மற்றும் பொது மக்களின் தனிப்பட்ட தகவல்களும் அந்த கும்பலால் திருடப்படுகின்றன. மேலும், காவல்துறை அதிகாரிகள் போலத் தொலைபேசியில் தொடர்புகொள்ளும் மோசடிக்காரர்கள், பாஸ்போர்ட் ரத்து செய்யப்படும் என மிரட்டி அபராதம் செலுத்துமாறு கூறி பொதுமக்களிடம் பணம் பறிக்கின்றனர்.

பாஸ்போர்ட் புதுப்பித்தல் மற்றும் விநியோக சேவைகள் தொடர்பாகப் போலி ஆவணங்களைக் காட்டியும் மோசடியில் ஈடுபடுகின்றனர்.

எனவே, பாஸ்போர்ட் தொடர்பான சேவைகளைப் பெறுவதற்கு www.passportindia.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தை மட்டுமே பொதுமக்கள் பயன்படுத்த வேண்டும்.

அனைத்துக் கட்டணங்களையும் அதிகாரப்பூர்வ தளத்தின் மூலமாகவே செலுத்த வேண்டும். வங்கிக் கணக்கு விவரங்கள், கடவுச்சொற்கள் உள்ளிட்ட ரகசியத் தகவல்களைப் பிறருடன் பகிரக் கூடாது.

முகவர்கள் மற்றும் சேவை வழங்குநர்களின் அடையாளத்தை முழுமையாகச் சரிபார்த்த பின்னரே அவர்களுடன் தொடர்புகொள்ள வேண்டும். விரைவாகப் பாஸ்போர்ட் பெற்றுத் தருவதாகக் கூறி கூடுதல் பணம் கேட்பவர்களை நம்பக் கூடாது.

பாஸ்போர்ட் ரத்து செய்யப்படும் என மிரட்டும் அழைப்புகள் வந்தால், அச்சமடைந்து பணம் செலுத்தவோ, தனிப்பட்ட தகவல்களை வழங்கவோ கூடாது.

பாஸ்போர்ட் தொடர்பான மோசடி யில் பாதிக்கப்பட்டவர்கள், www.cybercrime.gov.in என்ற இணையதளத்தின் மூலமாகவோ அல்லது 1930 என்ற உதவி எண்ணைத் தொடர்புகொண்டோ புகார் அளிக்கலாம். எனவே, விரைவான சேவை என்ற பெயரில் அளிக்கப்படும் போலி வாக்குறுதிகளையும், மிரட்டல் அழைப்புகளையும் நம்பி ஏமாறாமல், அரசு வழங்கும் அதிகாரப்பூர்வ சேவைகளை மட்டுமே பயன்படுத்தி எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *