அபிஜீத் திப்கே, நேஹா போரா தடுப்புக் காவலில் கைது டில்லியில் தடையை மீறி மூவர்ணக் கொடி ஏந்தி சிஜேபி பேரணி

- Advertisement -

புதுடில்லி, அக். 17-  சிஜேபி அறிவித்திருந்த ‘மூவர்ணக் கொடி’ போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக, தான் தங்கி இருந்த வீட்டில் இருந்து வெளியே வந்த அந்த அமைப்பின் நிறுவனர் அபிஜீத் திப்கேவை டில்லி காவல்துறையினர் அழைத்துச் சென்று தடுப்புக் காவலில் வைத்துள்ளனர்.

இதேபோல், மாணவர் அமைப்புத் தலைவர் நேஹாரா போராவும் போராட்டக் களத்திலேயே தடுப்புக் காவலில் கைது செய்யப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டார். எனினும், டில்லி காவல்துறையினரின் தடையை மீறி, சிஜேபியின் ‘மூவர்ணக் கொடி’ போராட்டப் பேரணி தொடர்ந்து நடைபெற்றது.

தலைமைத் தேர்தல் ஆணை யர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என போராட்டம் நடத்தி வரும் சிஜேபி அமைப் பினர், அதன் முக்கிய நிர்வாகி களான சவுரவ் தாஸ், அசுதோஷ் ரங்கா ஆகியோர் கைது செய் யப்பட்டதைக் கண்டித்து நேற்று (16.10.2026) மாலை 5 மணிக்கு டில்லி சென்ட்ரல் பார்க்கில் ‘மூவர்ணக் கொடி’ போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தனர்.

இந்தப் போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக தான் தங்கி இருந்த என்சிபி (எஸ்பி) செய்தித் தொடர்பாளர் வீட்டில் இருந்து டில்லி சென்ட்ரல் பார்க்கில் நடக்கும் போராட்டத்துக்கு கிளம்பிச் சென்ற சிஜேபி நிறுவனர் அபிஜீத் திப்கேவை தடுத்து நிறுத்திய காவலதுறையினர் அவரை அழைத்துச் சென்று தடுப்புக் காவலில் வைத்துள்ளனர். அபிஜீத் திப்கே வீட்டில் இருந்து வெளியே வந்தவுடன் அவரை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி கைது செய்ததாக சிஜேபி செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, அபிஜீத் திப்கேவை அவர் தங்கி இருந்த இல்லத்தில் சந்தித்த டில்லி காவல்துறை அதிகாரிகள், அவரி டம் இரண்டு நோட்டீஸ்களை வழங்கி உள்ளனர். அதில் ஒன்று, சென்ட்ரல் பார்க் பகுதியில் கூடுவதற்கு தடை இருப்பதால் அவர் அந்தப் போராட்டத்தில் கலந்து கொள்ளக் கூடாது எனத் தெரிவிக்கப்பட்டிருந்ததாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

இதனிடையே, மூவர்ணக் கொடி போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்திருந்த ஏஅய்எஸ்ஏ அமைப்பினர், நேஹா போரா தலைமையில், டில்லி மாண்டி ஹவுஸ் அருகில் இருந்து சென்ட்ரல் பார்க் நோக்கி பேரணி யாக சென்றனர். அவர்களை காவல் துறையினர் அங்கேயே தடுத்து நிறுத்தி, நேஹா போராவைத் தடுப்புக் காவலில் கைது செய்து அழைத்துச் சென்றனர்.

இந் தநிலையில், போராட்டம் அறிவிக்கப்பட்ட இடத்தில் 2000-க்கும் மேற்பட்ட இளைஞகள் கூடியுள்ளனர். தடையை மீறி மூவர்ணக் கொடி பேரணியும் தொடர்ந்தது. அங்கு காவல் துறையினரும் அதிக எண்ணிக் கையில் குவிக்கப்பட்டிருந்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *