அபிஜீத் தீப்கே, நேஹா போராவைத் தடுப்புக் காவலில் வைத்தது சட்டவிரோதம் : மு.க. ஸ்டாலின்

1 Min Read
- Advertisement -

சென்னை, அக்.17 அபிஜீத் தீப்கே, நேஹா போராவை காவலில் வைத்திருப்பது சட்டவிரோதச் செயல்’ என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரி வித்துள்ளார்.

இதுதொடர்பாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தன்னு டைய எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்தப் பதிவில், “எங்கே இருக்கிறார்கள் என்ற தகவலே தராமல் அவர்களைத் தடுத்து வைத்திருப்பது, அப்பட்ட மான சட்டவிரோதம், மனிதாபி மானமற்ற செயல். அமைதியான போராட்டங்களை ஒடுக்குவதை நிறுத்துவிட்டு, மத்திய அரசு அவர் களை உடனடியாக விடுவிக்க வேண்டும். இந்த நடவடிக்கையை நசுக்க மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு முயற்சியும், அதை இன்னும் வலிமை யாக்கவே செய்யும். ஞானேஷ்குமார் பதவி விலக செய்ய வேண்டும். ஒன்றிய பாஜக அரசுக்கு வேறு வழியில்லை” எனப் பதிவிட்டுள்ளார்.

மம்தா கண்டனம்!

அபிஜீத் தீப்கே கைது செய்யப்பட்டது அறிவிக்கப்படாத அவசரநிலைக்குக் குறைவானது அல்ல எனக் கூறி மம்தா கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுபற்றி, அவர் வெளியிட் டுள்ள எக்ஸ் தளப் பதிவில்,

“டில்லி காவல்துறை என்ன செய்து கொண்டிருக்கிறது? இந்தியாவின் தேசியக் கொடியை ஏந்தியதற்காக அபிஜீத் தீப்கே கைது செய் யப்பட்டு தடுப் புக் காவலில் வைக்கப்பட் டுள்ளார். இதைச் சற்று சிந்தித்துப் பாருங்கள். நம் இளைஞர்கள் சுதந்திர இந்தி யாவில் ஜனநாயக உரிமைகளை அமைதியான முறையில் நிலைநாட்டியதற்காகக் கைது செய்யப்பட்டுள்ளனர். இது அறிவிக்கப்படாத அவசர நிலையைத் தவிர வேறு எதுவு மில்லை. மாற்றுக் கருத்துகளைக் கண்டு அஞ்சும் ஒரு அரசு ஒட்டுமொத்த தலை முறையையும் மிரட்டி அமைதியாக்க முயற்சி செய்கிறது. தங்களால் கட்டுப் படுத்த முடியாத குரல்களை பொறுத்துக்கொள்ள முடியாத பாசிச அரசின் செயல் பாடு இது” எனக் கூறியுள்ளார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *