மனு அளித்த ஒரு மணி நேரத்திற்குள் நடவடிக்கை அரசு அதிகாரிகளுக்கும் தோழமைக் கட்சிகளுக்கும் நன்றி!

2 Min Read
- Advertisement -

தேனி, அக். 17- தேனி வட்டாட்சியர் அலுவலகத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் முத்துதேவன்பட்டி ஊர் பொதுமக்கள் சார்பில், பட்டா கோரி மனு அளிக்கும் போராட்டம் திராவிடர் கழகத்தின் தேனி மாவட்டச் செயலாளர்  பூ.மணிகண்டன் தலைமையில் நடைபெற்றது.

இப்போராட்டத்தில்  முத்துதேவன்பட்டி கிராமத் தலைவர் அ . சக்தி முருகன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிளைச் செயலாளர் மணி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். சுமார் 300க்கும் மேற்பட்ட கிராம மக்கள் ஊர்வலமாக சென்று வட்டாட்சியரிடம் தனித் தனியாக மனு அளித்தனர்

போராட்டத்தைத் தொடர்ந்து, பொது மக்களின் கோரிக்கைகள் குறித்து விரைந்து நட வடிக்கை எடுப்பதாக வட் டாட்சியர் உறுதியளித்தார். உறுதியளித்ததோடு மட்டுமல்லாமல், அரை மணி நேரத்திற்குள் முத்துதேவன்பட்டி கிராமத்திற்கு நேரில் வருகை தந்து ஆய்வு மேற்கொண்டார்.அதனைத் தொடர்ந்து, வருவாய்த் துறை அலுவலர்கள், கிராம நிர்வாக அலுவலர் மற்றும் நில அளவையாளர்கள் நேரில் வந்து, பட்டா வழங்குவதற்கான வீடுகளை அளவிடும் பணியைத் தொடங்கினர்.மனு அளித்த ஒரு மணி நேரத்திற்குள்ளாகவே களத்தில் இறங்கி நடவடிக் கைகளைத் தொடங்கிய அரசு அதிகாரிகளின் விரைவான செயல்பாடு பாராட்டுக்குரியது. பொது மக்களின் நீண்டகாலக் கோரிக்கைக்கு தீர்வு காணும் நோக்கில் உடன டியாகச் செயல்பட்ட வட்டாட்சியர் உள்ளிட்ட அனைத்து அரசு அதிகாரிகளுக்கும் எங்களது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

மேலும், இந்தப் போராட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்கிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தோழர்கள், அனைத்துக் கட்சித் தோழர்கள், தோழமை இயக்கங்களின் பொறுப்பாளர்கள் மற்றும் ஒற்றுமையுடன் குரல் கொடுத்த முத்துதேவன்பட்டி கிராமப் பொதுமக்கள் அனைவருக்கும் எங்களது உளமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

மக்களின் ஒற்றுமையும், தோழமை இயக்கங்களின் ஒருங்கிணைந்த முயற்சியும், அரசு அதிகாரிகளின் விரைவான செயல்பாடும் இணைந்தால், மக்களின் நியாயமான கோரிக்கைகளுக்குத் தீர்வு காண முடியும் என்பதற்கு இந்த நிகழ்வு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.பட்டா வழங்குவதற்கான நடவடிக்கைகள் முழுமையடைந்து, தகுதியுள்ள அனைத்து குடும்பங்களுக்கும் பட்டா கிடைக்கும் வரை நமது ஒருங்கிணைந்த முயற்சி தொடரும்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *