பறக்கும் படை வாகன சோதனையில் ரூ.273.72 கோடி பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல்

1 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

சென்னை, மார்ச் 28- தமிழ்நாட்டில் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில், மாநிலம் முழுவதும் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய அதிரடி சோதனையில் இதுவரை ரூ.273.72 கோடி மதிப்பிலான ரொக்கம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

24 மணி நேர தீவிர கண்காணிப்பு

தேர்தல் முறைகேடுகளைத் தடுக்கவும், வாக்காளர்களுக்குப் பணம் மற்றும் பொருட்கள் விநியோகிக்கப்படுவதைக் கண்காணிக்கவும் தமிழ்நாட்டிலுள்ள அனைத்து சட்டமன்றத் தொகுதி களிலும் கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இக்குழுக்கள் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

பறிமுதல் செய்யப்பட்ட விவரங்கள்:

தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின்படி, பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் வகைப்பாடு மதிப்பு (கோடிகளில்) ரொக்கப் பணம் ரூ. 44.89 கோடி. விலைமதிப்பற்ற உலோகங்கள் (தங்கம்/வெள்ளி) ரூ.116.07 கோடி. இலவசப் பொருட்கள் மற்றும் இதர பொருட்கள் ரூ.104.20 கோடி. போதைப் பொருட்கள் ரூ.7.60 கோடி. மதுபானங்கள் ரூ.0.93 கோடி. மொத்த மதிப்பு ரூ.273.71 கோடி.

பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களில் அதிகபட்சமாக தங்கம் மற்றும் வெள்ளி போன்ற விலைமதிப்பற்ற உலோகங்களே முதலிடத்தில் உள்ளன. உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்படும் பணம் மற்றும் பொருட்கள் மீதான இந்த அதிரடி நடவடிக்கை, தேர்தல் முடியும் வரை தொடரும் என அதிகாரிகள் எச்சரித் துள்ளனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *