உச்ச நீதிமன்ற தீர்ப்பு வரும் வரை தண்டனைக் கைதிகளுக்கு மாநில அரசே ‘விடுப்பு’ வழங்கலாம் சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

2 Min Read

சென்னை, ஜூன் 24 ஆயுள் தண்டனை கைதி உட்பட 4 கைதிகளுக்கு அவசரகால விடுப்பு (பரோல்) வழங்கக் கோரி அவர்களின் உறவினர்கள் அளித்த மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. விசாரணை நிலுவையில் இருக்கும்போது கைதி களுக்கு விடுப்பு வழங்க முடியாது என்ற சிறை விதி, தண்டனை விதிக் கப்பட்ட கைதிகளுக்குப் பொருந்தாது என்று கூறி, உறவினர்கள் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றத்தின் இரு வேறு அமர்வுகள், ‘விடுப்பு வழங் கலாம்’ என்றும் ‘வழங்கக் கூடாது’ என்றும் மாறுபட்ட தீர்ப்புகளை வழங்கின. இந்த முரண்பாட்டைத் தீர்ப்பதற்காக, வழக்கு 5 நீதிபதிகள் கொண்ட முழு அமர்வுக்கு பரிந் துரைக்கப்பட்டது.

அதன்படி, தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி, நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன், ஏ.டி.ஜெகதீஷ்சந்திரா, எம்.நிர்மல்குமார், சுந்தர் மோகன் ஆகியோர் அடங்கிய 5 நீதிபதிகள் கொண்ட முழு அமர்வில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.

நீதிமன்ற மூத்த வழக்கரைஞர் வாதம்

இந்த வழக்கில் நீதிமன்றத்திற்கு உதவ நியமிக்கப்பட்ட மூத்த வழக் குரைஞர் அபுடு குமார் ராஜரத்தினம் ஆஜராகி வாதாடினார். அவரது வாதத்தின் முக்கிய அம்சங்கள்:

சிறை கைதியாக இருந்தாலும், அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 21-இன் படி அவர்களுக்கு வழங் கப்பட்டுள்ள தனி மனித உரிமையை அரசு மறுக்க முடியாது. விடுப்பு (பரோல்) பெறுவது என்பது ஒவ் வொரு தண்டனை கைதியின் உரிமைகளில் ஒன்று.

மாநில அரசின் அதிகாரம்

இதே போன்றதொரு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. எனினும், வழக்கு நிலுவையில் இருந்தாலும் கைதிகளுக்கு விடுப்பு வழங்க மாநில அரசுக்கு அதிகாரம் உண்டு என்று உச்ச நீதிமன்றம் ஏற்ெகனவே ஒரு உத்தரவில் தெரிவித்துள்ளது.

இருதரப்பு வாதங்களையும், உச்ச நீதிமன்ற உத்தரவுகளையும் பரிசீலித்த 5 நீதிபதிகள் கொண்ட முழு அமர்வு பின்வரும் உத்தரவை பிறப்பித்துள்ளது:

“இதேபோன்ற வழக்கு உச்ச நீதி மன்றத்தில் நிலுவையில் இருப்பதால், தற்போது இறுதி உத்தரவு எதுவும் பிறப்பிக்க முடியாது. எனினும், உச்ச நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பு வரும் வரை, ஏற்ெகனவே உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புகளின் அடிப்படையில் மாநில அரசே தண்டனை கைதிகளுக்கு அவசர கால விடுப்பு (பரோல்) வழங்கலாம்.”

மேலும், இந்த உத்தரவின் நகலை தமிழ்நாடு உள்துறை செய லாளருக்கு அனுப்பவும், உச்ச நீதி மன்ற தீர்ப்பு வந்தவுடன் இந்த வழக்கை மீண்டும் பட்டியலிடவும் உயர் நீதிமன்ற பதிவுத்துறைக்கு நீதிபதிகள் ஆணையிட்டு, வழக்கை தள்ளிவைத்தனர்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *