பெரம்பலூர் மாவட்ட திராவிடர் கழகம் – பகுத்தறிவாளர் கழகக் குடும்ப விழா

- Advertisement -

பெரம்பலூர், அக். 17- பெரம்பலூர் மாவட்ட திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகக் குடும்பங்கள் ஒன்று கூடுகை விழா பெரம்பலூர் மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் 11.10.2026 அன்று காலை 10 மணிக்கு மாவட்டக் கழகத் தலைவர் சி.தங்கராசு தலைமையில், 30 கழகக் குடும்பங்களும், 20 ஆதரவாளர் குடும்பங்களும் என மொத்தம் 150 கழகக் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் 50 குழந்தைகள் ஒன்று கூடினர்.

“மந்திரம் அலல! தந்திரமே!” என்ற அறிவியல் நிகழ்வை, பார்வையாளர்கள் பாராட்டி வியக்கும் வண்ணம் மாவட்டச் செயலாளர் மு.விசயேந்திரன் மிகச் சிறப்பாக செய்து காண்பித்தார்.

பகுத்தறிவாளர் கழக மாவட்டச் செயலாளர் வழக்குரைஞர் சு.இராமு அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.

தலைமையுரை

நிகழ்வில் மாவட்ட காப்பாளர் ந.ஆறுமுகம், திமுக மாவட்டச் செயலாளர் வீ.செகதீசன், மாவட்ட திமுக பொறியாளர் அணி துணைச் செயலாளர் ப.பரமேஸ்குமார் ஆகியோர் முன்னிலை வகிக்க, மாவட்டக் கழகத் தலைவர் சி.தங்கராசு, நமது கழகக் குடும்பங்கள் ஒன்று கூடுவதன் அவசியத்தையும், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் வழிகாட்டுதல்படி, நமது இயக்கம் வலிமை பெறும் என்ற உயர்ந்த நோக்கத்தையும் சிறப்பாகக் கூறினார்.

மாநில கழக ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன், இயக்கத்தின் உயர்ந்த கொள்கைகளையும் ஆசிரியர் அவர்களின் எதிர்காலத் திட்டங்களையும், தொடச்சியான உழைப்பையும், ஒருங்கி ணைந்த செயலபாட்டையும் சிறப்பாகக் கூறினார்.

சிறப்புரை

கழகத் துணைப் பொதுச் செயலா ளர் வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி, “பகுத்தறிவுக் குடும்பமே – பண்பட்ட குடும்பம்” என்ற தலைப்பில் பகுத்தறிவின் பயன், வாழ்வியல் திறன், நமது குடும் பங்கள் ஒன்று கூடுவதால் ஏற்படும் நன்மைகள், பகுத்தறிவுக் குடும்பங்கள் உயர்ந்த கல்வி கற்று, உயர்ந்த அரசு பணியில் சிறப்பாகப் பணியாற்றி, சமூகத்திற்கு எடுத்துக்காட்டாக உள்ளனர் என்றும், நமது இயக்கம் அரசுக்கு வழிகாட்டியும், உயர்ந்த பண்பாடு, கல்வி, அறச்செயல், மொழி, இனம் ஆகியவற்றைப் பாதுகாக்கும் நமது அறிவு ஆசான் தந்தை பெரியாரின் வழியில் ஆசிரியர் அவர்களின் செயல் திட்டத்தையும் விளக்கி சிறப்பாகப் பேசினார்.

சிறப்பு செயல்கள்

நமது கழகக் குடும்பங்களில் ஜாதி மறுப்பு திருமணம் செய்து சிறப்பாக வாழ்ந்து வரும் 10 குடும்பங்களைப் பாராட் டிச் சிறப்புச் செய்யப்பட்டது. நமது கழகக் குடும்பத்தில் கல்வியில் முனைவர் பட்டம் பெற்ற 5 பேராசிரியர்களுக்குப் பாராட்டிச் சிறப்பு செய்யப்பட்டது.

கழக சிலம்பு ஆசிரியர் வரகூர் இராசேந்திரனின் அவர்களின் பயிற்சி மாணவர்கள் 10 பேர் சிலம்பாட்டம் சிறப்பாக ஆடி பார்வையாளர் பாராட் டைப் பெற்றனர். அவர்களுக்குப் பாராட் டிச் சிறப்பு செய்யப்பட்டது.

சிறுவர் சிறுமிகளுக்கு மகிழ்வான விளையாட்டுகளை நடத்தி அதில் கலந்து கொண்டவர்களுக்கு பரிசு வழங்கி, பாராட்டு செய்யப்பட்டது.

நமது கழகக் குடும்பத்தில் நல்ல உடல் நலம், உள நலம், சமூக நலம் பெற்று சிறப்பாக வாழ குழந்தைப் பருவம் முதல் இறப்பு வரை ஒவ்வொரு உணவு வேளையிலும், புரதம், நார்சத்து, வைட்டமின், கொழுப்புச் சத்து, மாவுச் சத்து, தாது உப்பு அளவான தூய்மையான என்ற ஊட்டச்சத்தின் அவசியத்தை சத்துப் பொருளைக் காண்பித்து, நமது கழக வழக்குரைஞர் பா.திவ்யா சிறப்பாக பேசினார். பகுத்தறிவாளர் கழக மாவட்ட துணைத் தலைவர் வெ.சிவசக்தி அனைவருக்கும் நன்றி கூறிட, விழா சிறப்பாக நிறைவு பெற்றது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *