தனியார் வசமாகும் அய்.டி.பி.அய்., வங்கி : ஒன்றிய அரசு ஒப்புதல்

2 Min Read
- Advertisement -

புதுடில்லி, அக். 16- ஒன்றிய அரசு மற்றும் எல்.அய்.சி., வசம் பெரும்பான்மை பங்குகளுடன் இயங்கி வரும் அய்.டி.பி.அய்., வங்கியின் 60 சதவீத பங்குகளை, கனடாவை சேர்ந்த பேர்பேக்ஸ் நிறுவனத்திடம் விற்க ஒன்றிய அமைச்சரவை நேற்று (15.10.2026) ஒப்புதல் அளித்தது.

கனடாவை சேர்ந்த, இந்திய வம்சாவளி தொழிலதிபர் பிரேம் வத்சாவுக்கு சொந்தமான முதலீட்டு நிறுவனமான ‘பேர்பேக்ஸ் பைனான் சியல் ஹோல்டிங்ஸ்’ நிறுவனத்திற்கு இவ்வங்கியின் பெரும்பான்மை பங்குகளை விற்பனை செய்வதன் வாயிலாக, இந்த நடவடிக்கை மேற் கொள்ளப்படுகிறது.

இது குறித்து ஒன்றிய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரி விக்கப்பட்டுள்ளதாவது: அய்.டி.பி.அய்., வங்கியின் 60.72 சதவீத பங்கு விற்பனைக்கு விடப்பட்ட ஒப்பந்தத்தில், பேர்பேக்ஸ் பைனான்ஷியல் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ‘10955230 கனடா’ தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஒரு பங்கை 81 ரூபாய் விலையில் வாங்க இந்நிறுவனம் அதிகபட்ச தொகையை தெரிவித்திருந்தது. இதற்கான மொத்த பரிவர்த்தனை தொகை 52,877.07 கோடி ரூபாயாகும்.

விற்பனை செய்யப்படவுள்ள பங்குகளில், ஒ்றிய அரசு வசமுள்ள 30.48 சதவீத பங்குகளும், இந்திய ஆயுள் காப்பீட்டு கழகமான எல்.அய்.சி., வசமுள்ள 30.24 சதவீத பங்குகளும் அடங்கும். இந்த பரிவர்த்தனை நிறைவடைந்ததும், இந்தியாவின் நிதித்துறையில் இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய அன்னிய நேரடி முதலீடாக இது அமையும். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, 2019இல் இந்நிறு வனத்தின் 51 சதவீத பங்குகளை எல்.அய்.சி., கையகப்படுத்திய நிலையில், அதை தனியார் வங்கியாக ஆர்.பி.அய்., அறிவித்தது. ஏர் இந்தியா நிறுவனத்தை டாடா குழுமத்துக்கு விற்பனை செய்ததற்கு பிந்தைய, நம் நாட்டின் மிக பெரிய தனியார் மயமாக்கல் இதுவாகும்.

கடந்து வந்த பாதை…

* 2017, மே: வாராக்கடன் 13% தாண் டியதால், ஆர்.பி.அய்., கண்காணிப்பு துவக்கம்

* 2019, ஜன.: 51 சதவீத பங்குகளை எல்.அய்.சி., கையகப்படுத்தியதால், தனி யார் வங்கியாக ஆர்.பி.அய்., அறிவிப்பு

* 2020, பிப்.: கூடுதல் பங்குகள் வெளியிடப்பட்டதால், அய்.டி.பி.அய்., வங்கி பங்குகளின் மொத்த எண் ணிக்கை அதிகரித்து, அதில் எல்.அய்.சி.யின் விகிதம் 49.24 ஆக குறைந்தது.

*2022, அக்.: 60.72% பங்குகளை விற்க அரசு விருப்ப மனுக்களை கோரியது

*2026, ஜன.: பங்கு விற்பனைக்கான நிதி ஏலங்களை அரசு கோரியது

*2026, அக்.: அய்.டி.பி.அய்.,யின் 60% பங்குகளை பேர்பேக்ஸ் கையகப்படுத்த அமைச்சரவை ஒப்புதல்

விளைவுகள்: பேர்பேக்ஸ் நிறுவனத் தின் நேரடி மேலாண்மை மற்றும் உல களாவிய மூலதன வருகை காரணமாக, அய்.டி.பி.அய்., வங்கியின் கடன் வழங்கும் திறன், தொழில்நுட்ப மேம்பாடு மற்றும் போட்டித்தன்மை கணிசமாக அதிகரிக்கும்; பொதுத்துறை மீதான நிதிச்சுமை இதன் வாயிலாக குறையும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *