தடுப்புகளை தாண்டி போராட்டம் நடத்த முயன்ற கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் நிர்வாகிகள் கைது!

- Advertisement -

புதுடில்லி, அக்.14 ஜந்தர் மந்தருக்குள் நேற்று (13.10.2026) அத்துமீறி நுழைந்த விவகாரத்தில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் சவுரவ் தாஸ், அஷுடோஷ் ரங்கா, அஜிங்கியா ஆகியோரைக் காவல் துறையினர் கைது செய்தனர்.

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராகவும் அவர் பதவி விலகக் கோரியும் டில்லி யில் நாளுக்கு நாள் போராட்டம் வலுத்து வருகிறது. கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் போராட்டத்தைத் தொடர்ந்து வருகின்றனர்.

டில்லியில் வழக்கமாக போராட் டங்கள் நடைபெறும் ஜந்தர் மந் தரில் போராட ஒன்றிய அரசு தடை விதித்து, ஜந்தர் மந்தர் இனி போராடுவதற்கான இடமில்லை என்று அறிவித்துள்ளது.

ஒன்றிய அரசின் அறிவிப்புகளைத் தொடந்து கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் சவுரவ் தாஸ், அசுதோஷ் ரங்கா மற்றும் பிற சிஜேபி உறுப் பினர்கள் நேற்று (13.10.2026) போராட் டம் நடத்த முயன்ற நிலையில் அவர்களை டில்லி காவல்துறை கைது செய்தது.

சிஜேபி நிர்வாகிகளான சவுரவ் தாஸ், அசுதோஷ் ரங்கா மற்றும் அஜிங்கியா ஷிண்டே ஆகியோரை டில்லி காவல்துறையினர் நாடாளு மன்றத் தெரு காவல் நிலையத்தில் கைது செய்து வைத்துள்ளதாக சிஜேபி சட்டப் பிரிவுத் தலைவர் ரத்னா சிங் தெரிவித்துள்ளார். மூவரையும் இன்று காலையில் தில்லி காவல்துறையினர் டில்லி உயர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தவுள்ளதாகவும் வழக்குரைஞர் ரத்னா சிங் தகவல் தெரிவித்துள்ளார்.

சவுரவ் தாஸ், அசுதோஷ் ரங்கா மற்றும் அஜிங்கியா ஷிண்டே மூவர் மீதும், டில்லியின் கன்னாட் பிளேஸ் காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப் பட்டுள்ளதாகவும், அதன் நகல் இன்னும் கிடைக்கவில்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

சிஜேபி நிறுவனர் அபிஜித் தீப்கே, நாடாளுமன்றத் தெரு காவல் நிலையத்தில் அஜிங்க்யா ஷிண்டே, அஷுதோஷ் ரங்கா மற்றும் சௌரவ் தாஸ் ஆகியோர் இருக்கும் ஒளிப்படத்தைப் பகிர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யப்பட்ட போதிலும் அவர் களிடம் “உற்சாகம் குறையவில்லை” என்று பதிவிட்டுள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *