நாட்டின் முதன்மை நீதிமன்றமான உச்ச நீதிமன்றத்தில் நிரப்பப்பட உள்ள 250 ஜூனியர் கோர்ட் அசிஸ்டண்ட் பணிகளுக்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
வேலைவாய்ப்பு விளம்பர எண். F.6/2026-SC (RC)
பணி: ஜூனியர் கோர்ட் அசிஸ்டண்ட்
காலியிடங்கள்: 250
ஊதியம்: மாதம் ரூ.35,400 + இதர படிகள் வழங்கப்படும்.
வயது வரம்பு: 1.7.2026 தேதியின்படி 18 முதல் 30-க்குள் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி, ஓபிசி, மாற்றுத்திறனாளிகளுக்கு ஒன்றிய அரசு விதிமுறைப்படி வயது வரம்பில் சலுகை வழங்கப்படும்.
தகுதி: ஏதாவதொரு துறையில் இளநிலைப் பட்டம் பெற்றிருப்பதுடன் கணினியில் பணியாற்றத் தெரிந்திருப்பதுடன், கணினியில் ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 35 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் மற்றும் கணினியில் பணிபுரியும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: கொள்குறி வகை எழுத்துத் தேர்வு, தட்டச்சுத் தேர்வு, விளக்க வகை எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்படுவர். பின்னர் விண்ணப்பதாரரின் தகுதி அடிப்படையில் பணி நியமனம் செய்யப்படுவர்.
எழுத்துத் தேர்வு நடைபெறும் இடங்கள்: தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரை, சேலம், திருச்சி, திருநெல்வேலி ஆகிய பெருநகரங்களில் நடைபெறும்.
விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி மற்றும் முன்னாள் ராணுவத்தினர்களுக்கு ரு.750. இதர அனைத்து பிரிவினர்களுக்கு ரூ.1500. கட்டணத்தை யுகோ வங்கி மூலமாக இணைய வரியில் செலுத்த வேண்டும்.
இணைய வரியில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 28.10.2026
