கொச்சியில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் வேலையை இனி ரோபோ செய்யும்!

- Advertisement -

கொச்சி, அக்.14- நெரிசல் மிகுந்த சந்திப்புகளில் போக்கு வரத்தை ஒழுங்குபடுத்தும் வேலையை இனி ஏஅய் தொழில்நுட்பம் கொண்ட ரோபோக்கள் செய்யும்; நாட்டில் முதல்முறையாக இந்தத் திட்டம் கொச்சி மாநகரில் அமல் செய்யப்பட உள்ளது.
ஆள் பற்றாக்குறையை சரி செய்து, பாதுகாப்புப் பணியை வலுப்படுத்தும் நோக்கில், கேரள காவல் துறை ஏஅய் மனித ரோபோ மற்றும் தானியங்கி இயந்திரங்களை பயன்படுத்தி இவ்விரண்டையும் களத்திற்கு கொண்டு வரத் தயாராகி வருகிறது.
கொச்சியில் அதி நவீன தொழில்நுட்பத்தை கேரள காவல் துறையினர் பயன்படுத்த இருக்கின்றனர். கொச்சியில் நடந்த சைபர் பாதுகாப்பு மாநாட்டின் போது, இதற்கான அதிகாரப் பூர்வ அறிவிப்பை மாநில உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னிதலா வெளியிட்டார்.
கொச்சியைச் சேர்ந்த ‘அய் ஹப் ரோபோடிக்ஸ்’ (I Hub Robotics) என்ற ஸ்டார்ட் அப் நிறுவனத்துடன் கேரள காவல் துறையினர் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டு இருக்கிறது. வானிலை மற்றும் நீண்ட நேரப் பணியால் போக்குவரத்து காவல் துறையினர்களுக்கு ஏற்படும் உடல் ரீதியான சிரமங்களைக் குறைக்க இந்த ஏஅய் அடிப்படையிலான ரோபோ போக்குவரத்து மேலாண்மையில் சோதனை முறையில் பயன்படுத்தப்படும்.
பேரிடர் மேலாண்மை, அவசரகால மீட்புப் பணிகள், ரோந்து மற்றும் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்துவதற்காக 6 சக்கரங்கள் கொண்ட இந்த அதிநவீன தற்காப்பு தரை வாகனம் பயன்படுத்தப் படும். அய் ஹப் ரோபோடிக்ஸ் நிறுவனம் எடப்பள்ளியில் இருந்து செயல்படுகிறது, இதன் உற்பத்தி ஆலைகள் களமசேரியில் அமைந்துள்ளன. ஆரம்பகட்ட சோதனைகள் விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வளர்ந்து வரும் சைபர் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் வகையில் காவல் துறையின் சைபர் பாதுகாப்பு மய்யமான சைபர்டோம் மேலும் பலப்படுத்தப்படும். விபத்துகள் அதிகம் நடக்கும் பகுதிகளைக் கண்டறியும் ‘ஏஅய் ட்ராக்’ மற்றும் இணையவழி மோசடிகளிலிருந்து மக்களைப் பாதுகாக்கும் ‘சைபர் வால்’ போன்ற ஏஅய் செயலிகளும் நடைமுறைக்கு வரவுள்ளன என தகவல் தெரிவிக்கின்றன.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *