மேற்கு வங்காளத்தில் ஹிந்தித் திணிப்பு: மம்தா எதிர்ப்பு

1 Min Read

கொல்கத்தா, அக்.12 மேற்கு வங்கத்தில் துர்கா பூஜையை முன்னிட்டு கொல்கத்தா மாநகராட்சி சார்பில் வருகிற 21 ஆம் தேதி வரை சிறப்பு தூய்மை நிகழ்ச்சிகள் நடக்கிறது. இதற்காக ஒட்டப்பட்ட சுவரொட்டிகளில் வங்காள மொழியுடன், ஹிந்தி யிலும் தகவல்கள் இடம்பெற்று உள்ளன.

இதன் மூலம் மாநில பாரதீய ஜனதா அரசு ஹிந்தித் திணிப்பை ஊக்குவிப்பதாக முன்னாள் முதலமைச்சர் மம்தாவின்  திரிணாமூல் காங்கிரஸ் அணி குற்றம் சாட்டியுள்ளது.

இது குறித்து அந்தக் கட்சியின் சமூக வலைத்தள பக்கத்தில், ‘நமது அழகான மொழி சிதைக்கப்படுவதற்கு பாரதீய ஜனதா அரசு அனுமதி அளிக்கிறது. டில்லியில் உள்ள உங்கள் எஜமானர்களை திருப்திப்படுத்துவதற்காக, வங்கா ளத்தின் மீது ஹிந்தியைத் திணிப்பதை நிறுத்துங்கள். இப்போதே நிறுத்துங்கள்’ என குறிப்பிட்டுள்ளது. இதைப்போல அந்த அணியின் பொதுச்செயலாளர் அபிஷேக்கும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *