திருத்துறைப்பூண்டி,அக். 12– திருத்துறைப்பூண்டி ஒன்றிய நகர கழகத்தின் சார்பில் தந்தை பெரியார் அவர்களின் 148ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா மாவட்டச் செயலாளர் சு.கிருஷ்ணமூர்த்தி தலைமையில் அனைத்துக் கட்சியின் சார்பில் தந்தை பெரியார் சிலைகளுக்கு மாலை அணிவித்தும், கழக கொடி ஏற்றியும் 17.09.2026 அன்று சிறப்பாக நடைபெற்றது.
திருத்துறைப்பூண்டி புதிய பேருந்து நிலையம் அருகே அமைந் துள்ள தந்தை பெரியார் முழு உருவ வெண்கலச் சிலைக்கு மாவட்ட ப.க துணைத் தலைவர் ரெ.புகழேந்தி, நகரத் தலைவர் சு.சித்தார்த்தன் நகரச் செயலாளர் ப.நாகராஜன் நகரத் துணைச் செயலாளர் பா சம்பத்குமார் ஆகியோர் முன்னிலையில் திராவிடர் கழக மாவட்டச் செயலாளர் சு.கிருஷ்ணமூர்த்தி தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது. திருத்துறைப்பூண்டி நகர திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் ஆர்.எஸ்.பாண்டியன் தலைமையில் தந்தை பெரியார் சிலைக்கு மாவட்ட, ஒன்றிய, நகர கிளைக் கழக பொறுப்பாளர்களும் பெரும் திரளாக கலந்து கொண்டு மாலை அணிவித்தார்கள்.
திருத்துறைப்பூண்டி ஒன்றியம், எழிலூர் பெரியார் நினைவு சமத்துவ புரத்தில் உள்ள பெரியார் சிலைக்கு மு.மதன் மாலை அணிவித்தார்.
மீனம்பநல்லூர் கடை தெருவில் உள்ள தந்தை பெரியார் படத்திற்கும் மாவட்ட ப.க துணைத் தலைவர் ரெ.புகழேந்தி தலைமையில் மாநில இளைஞரணி துணைச் செயலாளர் அஜெ.உமாநாத் முன்னிலையில் கோட்டூர் ஒன்றிய திமுக செயலாளர் ஞானி தந்தை பெரியார் படத்திற்கு மாலை அணிவித்து கழகக் கொடி யையும் ஏற்றி வைத்தார்கள்.
சிதம்பரம் கோட்டத்தில் இரா.அறிவழகன் இல்லத்தில் உள்ள கழகக் கொடியையும், தந்தை பெரியார் படத்திற்கும் ஒன்றிய செயலாளர் இரா.அறிவழகன் மாலை அணிவித்தும் கழக கொடியையும் ஏற்றினார்.
இராயநல்லூரில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு ஒன்றியத் தலைவர் ச.பொன்முடி தலைமையில் ஒன்றியச் செயலாளர் இரா.அறி வழகன் முன்னிலையில் மாவட்டச் செயலாளர் சு.கிருஷ்ணமூர்த்தி மாலை அணிவித்தார்
நானா நல்லூர் தந்தை பெரியார் இல்லத்தில் உள்ள கழகக் கொடியை மாவட்டச் செயலாளர் சு.கிருஷ்ணமூர்த்தி ஏற்றி வைத்தார்.
பண்ணைத் தெருவில் உள்ள நகரச் செயலாளர் ப.நாகராஜன் இல்லத்தில் உள்ள தந்தை பெரியார் படத்திற்கு மாவட்ட ப.க துணைத் தலைவர் ரெ.புகழேந்தி மாலை அணிவித்தார்.
திருத்துறைப்பூண்டி புதிய காய்கனி மார்க்கெட்டில் உள்ள தந்தை பெரியார் அவர்களின் 148ஆம் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தந்தை பெரியார் படத்திற்கு மாலை அணிவித்து அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.
