ஆவடி மாவட்ட கழகத் தோழர்களின் இல்ல விழா

1 Min Read

ஆவடி, அக். 12- ஆவடி மாவட்டம் பட்டாபி ராம் பகுதி கழகத் தலைவரும், பெரியார் பெருந்தொண்டருமான இரா.வேல்முருகன் அவர் களின் 80ஆம் பிறந்த நாள் (11.10.2026) மற்றும் ஆவடி மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர் க.கார்த் திக்கேயன் அவர்களின் 50ஆம் பிறந்த நாள் (6.10.2026) முன்னிட்டு 11.10.2026 அன்று காலை 11-00 மணிக்கு ஆவடி மாவட்ட திராவிடர் கழக  தலைவர் வெ.கார்வேந்தன் தலைமையில் செயலாளர் க.இளவரசன், துணைத் தலைவர் மு.ரகுபதி, துணைச்செயலாளர் க.தமிழ்ச்செல்வன், மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் ஜானகி ராமன்,அம்பத்தூர் பகுதி கழக தலைவர் பூ.இராமலிங ்கம், திருமுல்லைவாயல் பகுதி கழகத் தலைவர் இரணியன், திருநின்றவூர் பகுதி கழக செயலாளர் கீதாராமதுரை, மாவட்ட கழக இளைஞரணி துணைத் தலைவர் கலைவேந்தன், துணைச்செயலாளர் சென்னகிருட்டிணன், பெரியார் பெருந் தொண்டர் அம்பத்தூர் அ.வெ.நடராசன், திருநின்றவூர் பகுதி கழக இளைஞரணி அமைப்பாளர் ம.சிலம்ப ரசன், மாவட்ட கழகத் தோழர்கள் பழ.நல்.முத்துக்குமார், அருண் ஆகியோர் பயனாடை கள் மற்றும் இயக்கப் புத்தகங்களை வழங்கி வாழ்த்துகளை தெரிவித் தனர்.

நிகழ்வில் வேல்முருகன் குடும்பம் சார்பாக அவரது வாழ்விணையர் வசந்தா,மகள் இந்துமதி, மருமகன் அசோக்குமார், பேத்தி இலக்கியா, பேரன் அரவிந்தன் ஆகியோரும் கார்த்திக்கேயன் சார்பாக அவரது வாழ்விணையர் சுஜித்ரா, மகள் சமிக்சா  ஆகியோர் கலந்து கொண் டனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *