ஆரல்வாய்மொழி சி.மாடசாமி (எ) பழனியப்பாவின் படத்திறப்பு நினைவேந்தல்

1 Min Read

ஆரல்வாய்மொழி, அக். 12- கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய் மொழியில் திராவிடர் கழக பொதுக்குழு உறுப்பினர் மா.மணியின் தந்தையார் சி.மாடசாமி(எ) பழநியப்பா அவர்களின் படத்திறப்பு நினைவேந்தல் 10.10.2026. அன்று மாலை ஆறு மணிக்குநடைபெற்றது.

தஞ்சாவூர் மாநகர திராவிடர் கழகத் தலைவர் செ.தமிழ்ச்செல்வன் தலைமை வகித்தார். மாவட்ட கழகத் தலைவர் மா.மு.சுப்பிர மணியம், மாவட்ட கழகச் செயலாளர் கோ.வெற்றிவேந்தன் முன்னிலை வகித்தார்கள்.  அருட் தந்தை ஜார்ஜ் பொன்னையா படத்தினை திறந்து வைத்தார்.

கழக சொற்பொழி வாளர் தஞ்சை இரா.பெரியார்செல்வன் அறிவாசான் தந்தை பெரியார் தத்துவத்தின் சிறப்பினையும், ஆரல்வாய் மொழி மா.மணியின் தொண்டினையும் விளக்கி நினைவேந்தல் உரை யாற்றினார். கழக மாநில ஒருங்கிணைப்பாளர் ஒரத்தநாடு இரா. குண சேகரன் ஆரல்வாய்மொழி பேரூராட்சித் தலைவர் சொ.முத்துக்குமார், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட மேனாள் செயலாளர் எஸ். இசக்கி முத்து காங்கிரஸ் கட்சி வட்டாரத் தலைவர் எஸ்.முருகானந்தம் பஞ்சாயத்து மேனாள் துணைத் தலைவர் பி. பொன் பாண்டியன் அதிமுக கண்ணாடி பால கிருஷ்ணன் ஆகியோர் நினைவேந்தல் உரை ஆற்றினர்.

வாழ்விணையர் நாரா யண வடிவு, பிள்ளைகள் மா.இசக்கியம்மாள், மா.நாராயணன் மா. மணி (பெரியார் மணி) மா.மல்லிகா  மா.முத்து கிருஷ்ணன் குடும்பத்தினர் இந்திரா மணி, தமிழ் இலக்கியா, சேர்மராஜா, சுப யாழினி, சாகித்திய மகிழினி, தமிழ் மதி, பூபதி, தமிழ் இனியன், மாவட்ட கழகத் துணைத் தலைவர் ச.நல்லபெருமாள், பெரியார் பெருந்தொண் டர் ஞா.பிரான்சிஸ், கோட்டாறு பகுதி தலை வர் ச.ச.மணிமேகலை, மாவட்ட தொழிலாளர ணிச் செயலாளர் க. யுவான்ஸ், தோழர்கள் ச.ச.சத்தியா ராணி மு.பால் மணி உள்ளிட்டோர் பங்கேற்றனர். கழகப் பொதுக்குழு உறுப்பினர் மா.மணி அனைவருக்கும் நன்றி கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *