கரூர், அக். 12- கரூர் மாவட்ட திராவிடர் கழகம் மற்றும் தோழர் களம் சார்பில் தந்தை பெரியார் அவர்களின் 148 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழாவை முன்னிட்டு சமூக நீதி சமத்துவத்திற்கான பெரியார் நடை (மினி மாரத்தான்) போட்டி கரூர் லைட் ஹவுஸ் கார்னர் தந்தை பெரியார் சிலை முன்பு 11-10-26 அன்று காலை 6.30 மணிக்கு நடைபெற்றது.
கரூர் மாவட்ட கழகத் தலைவர் குமாரசாமி தலைமை யில் நடைபெற்றது. மாநில இளைஞரணி துணைச் செயலா ளர் ஜெகநாதன் வரவேற்பு உரை யாற்றினார். பெரியார் நடை மினி மாரத்தான் போட்டியை தோழர் களம், தலைவர், நிறுவனர் தி.க. சண்முகம் தொடங்கி வைத்தார்.
கரூர் லைட் ஹவுஸ் கார்னர் பெரியார் சிலை முன்பு புறப்பட்ட மினி மாரத்தான் உழவர் சந்தை, கரூர் பழைய பேருந்து நிலையம் ரவுண்டானா, ஜவகர் கடைவீதி, பழைய திண்டுக்கல் சாலை வழியாக லைட் ஹவுஸ் கார்னர் வந்தடைந்தன.
நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற கலந்து கொண்ட வீரர்களுக்கு கேடயம், பாராட்டுச் சான்றிதழ், பதக்கம்,பரிசுகள், வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் ஏ.எஸ்.அபுல் ஹாசன் (தலைவர் ஏ ஆர் எஸ் அறிவியல் மற்றும் மேலாண்மை கல்வி நிறுவனம்) வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகளை வழங்கினார். மாவட்ட திமுக வழக்குரைஞர் அணிச் செயலாளர் இரா. குடியரசு, மாவட்ட விடுதலை வாசகர் வட்டத் தலைவர் ம.கண்ணதாசன், மாவட்டக் காப்பாளர் வே.ராஜு, பொதுக்குழு உறுப்பினர்கள் சே.அன்பு,கட்டளை வைரவன், மாவட்டச் செயலாளர் காளிமுத்து, சா. மோகன் மாநில தொழிலாளர் அணிச் செயலாளர், மாவட்ட துணைச் செயலாளர் அலெக்ஸ், நகரச் செயலாளர் ராஜா, கிருஷ்ணராயபுரம் ஒன்றியத் தலைவர் பெருமாள், செயலாளர் வடிவேல், கரூர் ஒன்றியத் தலைவர் பழனிச்சாமி, மாவட்ட மகளிரணிச் செயலாளர் ராஜாமணி, மற்றும் தோழர் களம் அமைப்பின் சார்பில் தமிழன் சு.கவின் குமார் தலைமை நிலையச் செயலாளர், இரா ராஜகோபால் மாநில அவைத்தலைவர், வீரா.கோபி மேற்கு மண்டலச் செயலாளர், நா.மணியன் மாவட்ட தலைவர், தமிழன் நிதிஷ் தகவல் தொழில்நுட்ப அணி, திவ்யா மாவட்ட மகளிர் அணி செயலாளர், அருண்குமார் பெரியார் படிப்பகம், டைகர் ராஜீவ் காந்தி மேற்கு மாவட்டச் செயலாளர், அசுரன் திவா மாணவர் கழகம், திராவிட சரவணன் கிழக்கு மாவட்டச் செயலாளர், செந்தில்குமார் அரவை ஒன்றியச் செயலாளர், ராம்ஜி என்கிற தொல்காப்பியன் மாநில செயற்குழுத் தலைவர், ஞானவேல் மாநில இளைஞரணி துணைச் செயலாளர், டேவிட் நாகராஜ் கரூர் நகரத் தலைவர் மற்றும் தோழமைக் கட்சி நிர்வாகிகள் பா.குணசேகரன் பொதுச் செயலாளர், ந. சண் முகம் மாவட்டச் செயலாளர் சாமானிய மக்கள் கட்சி, பொன்னுச்சாமி மேற்கு மாவட்டச் செயலாளர் தமிழ் புலிகள் கட்சி, மூ.அரசன் மாவட்டச் செயலாளர் மக்கள் கலை இலக்கிய கழகம், புலி ரமேஷ் மாவட்டச் செயலாளர் திராவிட தமிழர் கட்சி, துரை அமுதன் மாநில தொழிற்சங்க தலைவர் ஆதி தமிழர் கட்சி, முருகேசன் மாவட்ட செயலாளர் ஆதித்தமிழர் கட்சி, மாவட்டத் தலைவர் முத்துக்குமார் பகுஜன் சமாஜ் கட்சி, மாவட்டச் செயலா ளர் செந்தில்குமார் திராவிடர் எழுச்சி பேரவை உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர் நிகழ்ச்சியின் நன்றி உரை சிலம்பம் சரவணன் சிலம்பம் ஆசிரியர் கரூர் மாவட்ட அமைப்பாளர் வழங்கினார்.
