குமரி மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பில் நடைபெற்ற பள்ளி மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

சமூக நீதிக்காக பெரியார் நடை/ஓட்டம்

இரணியல், அக்.10- தந்தை பெரியாரின் 148ஆவது பிறந்த நாளை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவர் களுக்கு பரிசளிப்பு விழா இரணியலை அடுத்த ஆழ்வார் கோவில் உமா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 16.9.2026 அன்று நடைபெற்றது.

பகுத்தறிவாளர் கழக மாவட்டத் தலைவர் உ.சிவதானு தலைமை தாங்கி பரிசுகளை வழங் கினார். மாவட்டக் கழகத் தலைவர் மா.மு.சுப்பிர மணியம் முன்னிலை வைத்து அனைத்து மாண வர்களுக்கும் பெரியார் நூல்களை வழங்கினார்.

மாவட்ட துணைத் தலைவர் ச.நல்லபெரு மாள், அமைப்புசாரா தொழிற்சங்க துணைச் செயலாளர் தா. ஜெபராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டச் செயலாளர் கோ.வெற்றிவேந்தன் விழாவினை தொடங்கி வைத்தார். பள்ளி தாளாளர் மகாதேவன் விழாவினை ஒருங்கிணைத் தார். ஏராளமான மாணவ மாணவியர்கள் விழாவில் கலந்து கொண்டனர்.

‘வைக்கம் போராட் டத்தில் தந்தை பெரியார்’, ‘பெரியாரின் பெண்ணுரிமை சிந்தனைகள்’, ‘பெரியார் எனும் உலகத் தலைவர்’, ‘சுயமரியாதை இயக்கத்தில் அனைவருக்கும் அனைத் தும்’, ‘தமிழுக்கு தந்தை பெரியாரின் பங்களிப்பு’, ‘என்றும் தேவை பெரியார்’ போன்ற தலைப்புகளில் போட்டி நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. பகுத்தறி வாளர் கழக மாவட்டச் செயலாளர் பெரியார் தாஸ் நன்றி கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *