பெரியார் பாலிடெக்னிக்கில் “இனிவரும் உலகம் 2026” மாபெரும் அறிவியல் கண்காட்சி!

சமூக நீதிக்காக பெரியார் நடை/ஓட்டம்

வல்லம், அக்.10- வல்லம், பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியில் “இனிவரும் உலகம் 2026” என்ற தலைப்பிலான மாபெரும் அறிவியல் கண்காட்சி 7.10.2026 அன்று காலை துவங்கியது.

பள்ளி மாணவர்களின் சிந்த னைத் திறனையும், அறிவியல் மனப் பான்மையையும் ஒருங்கிணைத்து அவர்களின் புதுமையான ஆராய்ச்சி திறமைகளை ஊக்குவிக்கும் விதமாக தொழில்நுட்ப ஆராய்ச்சித் திட்டம், சுற்றுச்சூழலை பாதுகாக்கும் அணுகுமுறை மாதிரி திட்டங்களின் செயல்முறை விளக்கம் ஆகியவற்றை உள்ளடக்கிய மாபெரும் அறிவியல் கண்காட்சி 2026 துவக்க விழாவில் பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியின் துணைமுதல்வர் முனைவர் க.ரோஜா தலைமை ஏற்று உரையாற்றினார்.

அவர் தமது உரையில் “பள்ளி மாணவ, மாணவியர்கள் இதுபோன்ற அறிவியல் கண்காட்சியில் கலந்து கொண்டு தங்களது ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்பத் திட்டங்களைக் காட்சிக்கு வைக்கும் போது மாணவர்கள் மத்தியில் ஆர்வமும் ஆக்கப்பூர்வமான செயல் திறனும் வெளிப்படுகிறது என்று கூறிய அவர் மாணவ, மாணவிகள் இது போன்ற கண்காட்சிகளில் கலந்து கொள்ளும் போது மற்ற மாணவர்களின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அறிவு பரிமாற்றத்திற்கு “இனிவரும் உலகம்” என்ற தலைப்பிலான கண்காட்சி ஒரு தளமாக விளங்குகிறது” என்று குறிப்பிட்டார்.

தொடக்க விழாவை அடுத்து அனைத்து பள்ளி மாணவர்களின் தொழில்நுட்பத் திட்டங்களை தொழில்நுட்ப வல்லுநர்கள் மதிப்பாய்வு செய்தனர். சுமார் 35 பள்ளிகளிலிருந்து 35 மாணவர் குழுக்கள் காட்சிக்கு வைத்த தொழில்நுட்பத் திட்டங்களை தஞ்சாவூர் லாட்ஜிக்சன் கேரியர் டெவலப்மெண்ட் மய்ய நிர்வாக இயக்குநர் பொறியாளர் எஸ்.எம்.சேதுபதி, தஞ்சாவூர் எம்ஒய்அய்டி (MYIT) நிர்வாக இயக்குநர் டி.கோகிலா, வல்லம், பெரியார் ஃபவுண்டேசன் பார் பிரீ-இன்குபேசன் மேலாளர் (Periyar Foundation for Pre-Incubation Manager) பிரவீன்ராஜ் ஆகியோர் மதிப்பாய்வு செய்து முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் பரிசுக்குறிய திட்டங்களைத் தேர்வு செய்தனர்.

அடுத்ததாக வருகை தந்த சுமார் 100க்கு மேற்பட்ட பள்ளி மாணவர்கள் வரிசையாக சென்று இப்பாலிடெக்னிக் கல்லூரியில் உள்ள அனைத்துத் துறைகளின் வகுப்பறைகள், கற்றல் திறனை வளர்க்கும் நவீன வசதிகளுடன் கூடிய செயல்முறை ஆய்வகங்கள், கல்லூரியின் உட்கட்டமைப்பு வசதிகள், 64,000-க்கும் மேற்பட்ட புத்தகங்கள் பெற்றுள்ள மிகப்பெரிய நூலகம் ஆகியவற்றை சுற்றிப் பார்த்தனர்.

மதிய உணவு இடைவேளைக்குப் பின் பெரியார் நூற்றாண்டு கல்லூரியைப் பற்றிய அறிமுகக் காணொலியை பள்ளி மாணவர்கள் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் கண்டு மகிழ்ந்தனர்.

அடுத்ததாக நடைபெற்ற நிறைவு விழாவில் பரிசுகள் வழங்குதல் நடைபெற்றது. முன்னதாக பள்ளி மாணவர்களுடன் இக்கண்காட்சியில் கலந்து கொண்ட ஆசிரியர்களுக்கு சால்வை அணிவித்து சிறப்பு செய்யப்பட்டது.

அம்மாபேட்டை யூ.ஏ.வி.டி. மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் ஆர்டினோ எல்பிங் பாட் (Aurdino Based Helping Bot) என்ற திட்டம் முதல் பரிசுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு மாணவர்களுக்கு சான்றிதழ், நினைவுப் பரிசு மற்றும் ரூ.3,000 ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது.

ஜெயங்கொண்டம், பெரியார் மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் தயாரித்த கிம்பல் கேமரா (Gimbal Camera) என்ற திட்டம் இரண்டாம் பரிசுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு மாணவர்களுக்கு சான்றிதழ், நினைவுப்பரிசு மற்றும் ரூ.2000 ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது.

அம்மாபேட்டை அரசினர் உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் தயாரித்த “ஸ்மார்ட் வெயிட்டர் ரோபோட் பார் சர்விங்  ரெஸ்டாரண்ட்” (Smart Waiter Robot for Serving in Restaurant) என்ற திட்டம் மூன்றாம் பரிசுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு மாணவர்களுக்கு சான்றிதழ், நினைவுப் பரிசு மற்றும் 1,000/- ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது.

மேலும் மருங்குளம் அரசினர் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் தயாரித்த “எலெட்ரிக் டேங்க் கிளீனர்” (Electric Tank Cleaner) என்ற திட்டமும், தஞ்சாவூர் கமலா சுப்புரமணியம் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் தயாரித்த “எலெட்ரிக் மேக்னடிக் லெவிடேசன் சிஸ்டம்” (Electro Magnetic Levitation System) என்ற திட்டமும் சிறப்பு பரிசுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு மாணவர்களுக்கு சான்றிதழ்கள், நினைவு பரிசு மற்றும் 500/- ரொக்க பரிசு வழங்கப்பட்டது.

முன்னதாக தொடக்க விழாவில் இப்பாலிடெக்னிக் கல்லூரியின் முதலாம் ஆண்டு கட்டட எழிற்கலைத் துறை மாணவி ப.மோகன திவ்யானி பிரியா வரவேற்புரை வழங்கினார்.

பேராசிரியர்கள் இரா.சந்திர சேகரன், ரா.சவுமியா, ஞா.செங்கொடி ஆகியோர் இந்நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர்.

இப்பாலிடெக்னிக் கல்லூரியின் முதலாம் ஆண்டு செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திர கற்றல் துறை மாணவி அ.இனியா நன்றியுரையாற்ற விழா இனிதே நிறைவுற்றது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *