பகுத்தறிவின் பகலவன் – தந்தை பெரியார்

சமூக நீதிக்காக பெரியார் நடை/ஓட்டம்

பகுத்தறிவின் பகலவன் – தந்தை பெரியார்

சாதியின் சுவரைத் தகர்த்தெறிய வந்த சிந்தனைப் புயல்,
சமத்துவ விதையைச் சமூக மண்ணில் விதைத்த புரட்சி நிழல்!
பெண்ணடிமை விலங்குகளைப் பேரறிவால் உடைத்தவர்,
பெருமைமிகு மனிதநேயப் பாதையினைத் திறந்தவர்!

கேள்வி கேட்கும் உரிமையை குரலாகத் தந்தவர்.
கண்மூடிப் பழக்கங்களை அறிவொளியால் வென்றவர்!
சுயமரியாதை என்னும் சுடரைக் கையில் ஏந்தி,
சுரண்டலின் இருளை விரட்டினார் நெஞ்சம் தோய்ந்து!

பிறப்பால் உயர்வு தாழ்வு இல்லை என்ற பேருண்மை,
பிறந்தோர் அனைவருக்கும் சம உரிமை என்ற நன்மை!
கல்வி எனும் ஆயுதத்தை ஒவ்வொரு கையிலும் தந்தார்.
கட்டுப்பட்ட சமூகத்தின் கதவுகளைத் திறந்தார்!

பெண்ணின் உரிமை காக்கப் பெருங்குரல் எழுப்பினார்,
பேதமற்ற உலகைக் காணப் புதிய பாதை வகுத்தார்!
மதத்தின் பெயரால் மனிதனைப் பிரிக்காதே என்றார்,
மனிதநேயம் மேலென்று மண்ணுலகிற்கு உரைத்தார்!

உழைப்பவனின் வியர்வைக்கு உரிய மதிப்பைக் கேட்டார்,
உண்மையின் வழியில் நடக்கத் துணிவினை ஊட்டினார்!
பெரியார் விதைத்த விதைகள் இன்றும் முளைக்கின்றன,
பேதமற்ற சமுதாயக் கனவுகள் நாளும் வளர்கின்றன!

அறிவே நம் ஆயுதம், சமத்துவமே நம் வெற்றி,
அவர் காட்டிய பாதையில் மனிதநேயம் நம் சொத்து!
சுயமரியாதைச் சுடருடன் சமூகநீதி மலரட்டும்,
பெரியாரின் கொள்கை வழி புதிய உலகம் பிறக்கட்டும்!

– பா.நூருல்லாஹ்,
முதுகலை பட்டதாரி ஆசிரியர்,
அல்அமீன் மேல்நிலைப்பள்ளி, மதுரை

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *