ஒருமுகமாகும் சிறுபான்மையினரின் வாக்குகள்- மயிலாடன்

2 Min Read

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான பரப்புரை  நிறைவடைந்த நிலையில், கள நிலவரம் ஆளுங்கட்சியான திமுகவிற்குச் சாதகமாகத் திரும்பியுள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

குறிப்பாக, சிறுபான்மையினர் வாக்குகளை ஒருமுகப்படுத்தும் முயற்சியில் திமுக கூட்டணி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது.

கடந்த காலங்களில் சிறுபான்மையினர் வாக்குகள் வெவ்வேறு கட்சிகளுக்குப் பிரிந்து செல்வது வழக்கமாக இருந்தது. ஆனால், இந்தத் தேர்தலில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (IUML), மற்றும் மனிதநேய மக்கள் கட்சி (MMK), எஸ்.டி.பி.அய். ஆகியவற்றுடன் ஒட்டுமொத்த இஸ்லாமிய அமைப்புகளும் திமுக கூட்டணிக்குத் தங்களது முழுமையான ஆதரவை வழங்கியுள்ளன.

இந்தத் தேர்தலின் மிக முக்கியமான திருப்பமாக, அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் (AIMIM) கட்சித் தலைவர் அசாத்துதீன் ஓவைசி திமுக கூட்டணிக்குத் தனது ஆதரவை அறிவித்துள்ளார்.

பொதுவாக ஓவைசியின் கட்சி தனித்துப் போட்டியிடும்போது, குறிப்பாக வட இந்தியாவில் சிறுபான்மையினர் வாக்குகளைப் பிரித்து, மறை முகமாக பாஜகவிற்குச் சாதகமாக முடியும் என்ற விமர்சனம் முன்வைக்கப்படும்.

தற்போது ஓவைசியும் திமுக அணியில் இணைந் திருப்பதால், இஸ்லாமிய வாக்குகளில் துளியும் சிதறல் ஏற்பட வாய்ப்பில்லை என்பது உறுதியாகியுள்ளது. இது அதிமுக-பாஜக கூட்டணியைத் தற்காப்பு நிலைக்குத் தள்ளியுள்ளது.

சிறுபான்மையினர் வாக்குகள் அதிகம் உள்ள தொகுதிகளில் இந்த ஒருங்கிணைப்பு மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது:

வேலூர், ஆம்பூர், நாகை, பாபநாசம் போன்ற இந்தத் தொகுதிகளில் இஸ்லாமிய வாக்குகள் வெற்றியைத் தீர்மானிக்கும் சக்தியாக உள்ளன. ஓவைசியின் ஆதரவு இங்கு திமுகவின் வெற்றியை மேலும் உறுதிப்படுத்தும்.

திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் ராமநாத புரம் போன்ற மாவட்டங்களில் சிறுபான்மையினரின் ஒருமுகப்பட்ட வாக்குகள் திமுக கூட்டணிக்கு வலுவான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்துள்ளன.

ஒட்டுமொத்த கிறிஸ்தவ சமூக அமைப்புகளும் வியாழன் அன்று (16.04.2026) சென்னையில் முதலமைச்சரைச் சந்தித்து தங்களின் ஆதரவைத் தெரிவித்த்தும் குறிப்பிடத்தக்கது.

அதிமுக மீண்டும் பாஜகவோடு கூட்டணி அமைத்துள்ள சூழலில், சிறுபான்மையினர்  திமுக பக்கம் நிற்பது புரிந்து கொள்ளத்தக்கதே! மதச்சார்பற்ற வாக்குகள் சிதறாமல் இருப்பதை உறுதி செய்துள்ளதன் மூலம், திமுக தலைமையிலான கூட்டணி
200-க்கும் மேற்பட்ட தொகுதிகளைக் கைப்பற்ற இலக்கு நிர்ணயித்துள்ளது. ஒட்டுமொத்தமாகப் பார்க்கையில், சிறுபான்மையினரின் இந்த ‘மெகா கூட்டணி’ ஆதரவு, மே 4-ஆம் தேதி வெளியாகவுள்ள தேர்தல் முடிவுகளில் திமுகவின் பெரும் வெற்றிக்கு முக்கியக் காரணியாக அமையும் என்பதில் ஐயமில்லை.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *