அமெரிக்காவில் பயிலும் மாணவர்களுக்கு விருப்பப் பயிற்சிக் கட்டணமாக ரூ. 67 லட்சம் பெறத் திட்டம் முன்மொழிவு

1 Min Read

சமூக நீதிக்காக பெரியார் நடை/ஓட்டம்

நியூயார்க், அக். 9- அமெரிக்காவில் பயிலும் மாணவர்கள் விருப்பப் பயிற்சி பெற்றுக்கொள்வதற்காக இனி கட்டணம் கட்ட வேண்டும் என்ற புதிய முன்மொழிவை அதிபர் டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதன்படி, அமெரிக்காவில் படிப்பை முடித்து அங்கேயே விருப்பப் பயிற்சி பெற விரும்பும் மாணவர்கள் 70,000 டாலர்கள் கட்டணம் செலுத்த வேண்டும். இந்திய ரூபாய் மதிப்பில் ரூ. 67 லட் சம். இதற்கு முன்பு இதற்காக 500 டாலர்கள் கட்டணமாக இருந்த நிலையில், அதனை உயர்த்த அமெ ரிக்க நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

அமெரிக்க அதிபராக பொறுப் பேற்றதில் இருந்து பல்வேறு அதிரடி உத்தரவுகளை டிரம்ப் நிர்வாகம் பிறப்பித்து வருகிறது. எச்-1பி விசா, மாணவர் விசா உள்ளிட்ட பல்வேறு விசாக்களிலும் புதிய விதிமுறைகள் கொண்டு வரப்பட்டுள்ளன.

அந்தவகையில் அமெரிக்காவில் தங்கிப் பயிலும் வெளிநாட்டு மாணவர்கள், அமெரிக்காவிலேயே முதல்முறை விருப்ப செய்முறைப் பயிற்சி பெற 70 ஆயிரம் டாலர்கள் கட்டணம் செலுத்த வேண்டும் என அமெரிக்க நிர்வாகம் பரிந்துரை செய்துள்ளது. அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் (STEM) பிரிவுகளில் படித்த மாணவர்களுக்கு வழங்கப்படும் கூடுதல் 24 மாத பணி பயிற்சி நீட்டிப்புக்கும் 30 ஆயிரம் டாலர்கள் கட்டணம் செலுத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இப்பயிற்ச்சிக்கு 500 டாலர்கள் மட்டுமே கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவில் பயிலும் வெளி நாட்டு மாணவர்களில் 31% இந்திய மாணவர்கள். இதனால் இந்த பரிந்துரை இந்திய மாணவர்களை பெருமளவில் பாதிக்கும் என கல்வி யாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *