கலைஞர் அறக்கட்டளை சார்பில் ரூ.2 லட்சம் நிதியுதவி : தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்

சமூக நீதிக்காக பெரியார் நடை/ஓட்டம்

சென்னை அக். 09– கலைஞர் கருணாநிதி அறக்கட்டளை சார்பில் ஏழை, எளிய நலிந்தோருக்கான உதவிகள் மற்றும் மருத்துவ உதவிக்கு ரூ.2 லட்சத்தை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

இதுகுறித்து திமுக தலைமை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி வழங்கிய ரூ.4 கோடி வைப்பு நிதியிலிருந்து வரும் வட்டித் தொகையைக் கொண்டு 2007 பிப்ரவரி முதல் தொடர்ந்து நலிந்தோருக்கு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்த மாதத்துக்கான நலிந்தோர் மற்றும் மருத்துவ உதவி நிதியாக 8 பேருக்கு தலா ரூ.25,000 வீதம் மொத்தம் ரூ.2 லட்சம் நிதியுதவியை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று (8.10.2026) வழங்கினார்.

இந்த உதவித் தொகை, அஞ்சல் மூலம் வங்கி வரைவோலையாக பயனாளிகளுக்கு அனுப்பி வைக்கப் பட்டது’’ என்று கூறப்பட்டுள்ளது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  


Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *