புதுடில்லி, அக் 09- மருந்து நிறுவனங்களின் சட்டவிரோத சந்தைப்படுத்துதலை தடுப்பதற்கான பரிந்துரைகளை வழங்க குழு அமைக்குமாறு ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மருந்து நிறுவனங்கள் நெறி முறையற்ற சந்தைப்படுத்துதல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதை கட்டுப்படுத்தவும், அதை ஒழுங்கு படுத்தவும் வழிகாட்டு நெறி முறைகளை வெளியிடுமாறு உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு இருந்தது.
இந்த மனுவை நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா அமர்வு விசாரித்து வருகிறது. வழக்கு நேற்று (8.10.2026) மீண்டும் இந்த அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, ‘மருந்து நிறுவ னங்களின் நெறிமுறையற்ற சந்தைப் படுத்துதலை தடுக்கும் வகையில் ஒரு குழுவை அமைக் குமாறு ஒன்றிய அரசுக்கு நாங்கள் அறிவுறுத்தி யுள்ளோம். அந்தக்குழு சம்பந்தப்பட்ட தரப் பினரின் ஆலோசனைகளையும் கோரிக்கைகளையும் பரிசீலித்த பின்னர், தனது பரிந்துரைகளை ஒன்றிய அரசுக்கு வழங்கும்’ என நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் தெரிவித்தனர்.
பின்னர் இந்த வழக்கின் விசாரணையை அடுத்த ஆண்டு (2027) ஜனவரி 29-ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.
முன்னதாக இந்த வழக்கு கடந்த மாதம் 8-ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது, இந்த விவகாரத்தில் 3 பேர் குழு ஒன்று அமைக்கநடவடிக்கை எடுத்து வருவதாக ஒன்றிய அரசு கூறியிருந்தது.
மருந்து நிறுவனங்கள் நெறி முறையற்ற சந்தைப்படுத்துதலில் ஈடுபடாமல் இருப்பதை உறுதி செய்யும் வகையில் பரிந்துரைகளை வழங்குவதற்கு, இந்த குழுவுக்கு 2 மாதம் அவகாசம் கேட்ட ஒன்றிய அரசு, அந்த நேரத்தில் பரிந்துரை களை பெற்று நீதிமன்ற ஒப்புதலுக்காக வழங்குவோம் என்றும் தெரிவித்து இருந்தது.
மருந்து நிறுவனங்கள் எந்த விதமான சட்ட விரோத நடவடிக்கை களிலும் ஈடுபடாமல் இருப்பதை உறுதி செய்யும் நெறிமுறைகள் அவசியம் என்பதை ஒன்றிய அரசு தனது பிரமாண பத்திரத்திலும் ஒப்புக்கொண்டு இருந்தது.
எனவே சிறப்புகுழுவின் பரிந் துரைகள் கிடைத்தபின் அதற்கேற்ப நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதியளித்து இருந்தது குறிப்பிடத் தக்கது.
