அருணாச்சலப் பிரதேச முதலமைச்சர் மீதான ஊழல் புகார்: சி.பி.அய். விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும் மோடி மவுனம் காப்பது ஏன்? ஜெய்ராம் ரமேஷ் கேள்வி!

2 Min Read

புதுடில்லி, மே 21 அருணாச்சலப் பிரதேச முதலமைச்சர் குடும்பத்தினர் மீதான ரூ.1,270 கோடி ஊழல் புகாரில் உச்ச நீதிமன்றம் சிபிஅய் விசா ரணைக்கு உத்தரவிட்ட பின்னரும், பிரதமர் நரேந்திர மோடி மவுனம் சாதிப்பது ஏன் என்று காங்கிரஸ் மூத்த தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஜெய்ராம் ரமேஷ் கடுமையாகச் சாடியுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ‘எக்ஸ்’ (ட்விட்டர்) சமூக வலைதளப் பக்கத் தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

உச்ச நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு

“அருணாச்சலப் பிரதேச முதலமைச்சரின் குடும்பத்தினருக்கு, கடந்த ஜனவரி 2015 முதல் டிசம்பர் 2025 வரையிலான 10 ஆண்டு காலத்தில், தங்களது அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி ரூ.1,270 கோடி மதிப்பிலான அரசு ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டதாகக் கடுமையான குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இதுகுறித்து மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஅய்) உடனடியாக விசாரணையைத் தொடங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி  உத்தரவைப் பிறப்பித்துள்ளது.”

பதவியில் நீடிப்பது நியாயமா?

இது ஏதேனும் ஒரு சாதாரண கீழமை நீதிமன்றமோ அல்லது உயர் நீதிமன்றமோ பிறப்பித்த உத்தரவு அல்ல; நாட்டின் மிக உயரிய அமைப்பான உச்ச நீதிமன்றமே பிறப்பித்த உத்தரவாகும். இத்தகைய சூழலிலும், அந்த முதலமைச்சர் தொடர்ந்து தனது பதவியில் நீடித்து வருகிறார்.

அவர் முதலமைச்சர் பதவியோடு மட்டுமல்லாமல், பொதுப்பணித் துறை அமைச்சராகவும் பொறுப்பு வகிக்கிறார். இதனால், சிபிஅய் விசாரணைக்குத் தேவைப்படும் முக்கிய கோப்புகளையும், ஆதாரங் களையும் கட்டுப்படுத்தும் அதி காரம் அவரிடமே உள்ளது. இது விசாரணையின் நேர்மையைக் கேள்விக்குறியாக்கும்.

பிரதமரின் மவுனம் ஏன்?

“நான் ஊழல் செய்யமாட்டேன்; மற்றவர்களையும் ஊழல் செய்ய விடமாட்டேன்” (நா காவூங்கா, நா கானே தூங்கா) என்று ஒரு காலத்தில் மேடைகளில் முழக்கமிட்ட பிரதமர் நரேந்திர மோடி, இப்போது இந்த விவகாரத்தில் ஏன் மவுனம் சாதிக்கிறார்?

அருணாச்சலப் பிரதேச முதல மைச்சரைப் பதவியில் இருந்து விலகுமாறு பாஜக தரப்பில் யாரும் ஏன் இன்னும் கோரவில்லை? இது உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பையே கேலிக்கூத்தாக்கும் ஒரு மிக மோசமான செயலாகும். மேலும், இந்த அருணாச்சலப் பிரதேச முதலமைச்சரைப் போன்றே, இதே ஊழல் பின்னணியைக் கொண்ட வேறு சில பாஜக முதலமைச்சர்களும் நாட்டில் உள்ளனர். இவ்வாறு ஜெய்ராம் ரமேஷ் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *