தமிழர் தலைவரின் பேருள்ளத்திற்கு தஞ்சை மறைந்த உபயதுல்லா மகளின் நன்றிக் கடிதம்

எங்களுடைய அன்பு அழைப்பையேற்று, 16.06.2026 அன்று தஞ்சைக்கு வருகை புரிந்து,  என் தந்தையார் நினைவில் வாழும் சி.நா.மீ.உபயதுல்லா அவர்களின் புகழ் மலரை வெளியிட்டுச் சிறப்புரையாற்றிப் பெருமை சேர்த்துத் தந்ததற்கு எங்கள் குடும்பத்தின் சார்பில் மிகுந்த நன்றிகளைத் தெரியப்படுத்திக் கொள்கிறோம்.

மேலும் தாங்கள் உரையாற்றும்போது, “சி.நா.மீ.உபயதுல்லா அவர்களின் பெயர் நிலைபெறும் வகையில், வல்லத்தில் அமைந்துள்ள பெரியார் மணியம்மை பாலிடெக்னிக் கல்லூரியில், கட்டடம் ஒன்றுக்கு உபயதுல்லாவின் பெயர் பொறிக்கப்படும்” என்று குறிப்பிட்டீர்கள். அவ்வாறு குறிப்பிட்ட ஒரு வார காலத்திலேயே உடனடியாக அச்செயலை நிறைவேற்றித் தந்தமையை அறிந்து மிகவும் மகிழ்கிறோம்.

தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோரை என்றைக்கும் நெஞ்சில் சுமந்து வாழ்ந்து மறைந்த என் அத்தா உபயதுல்லா அவர்களுக்கு மிகவும் சிறப்புச் சேர்த்திருக்கிறீர்கள். தங்களுடைய பெரிய உள்ளத்தையும், என் தந்தையார் மீது தாங்கள் கொண்டிருந்த அளப்பரிய பற்றினையும் எண்ணிப் பெருமிதம் அடைகிறோம். தங்களுடைய பேருள்ளத்திற்கும், செயற்கரிய செயலுக்கும் என்றைக்கும் நன்றியுடையவர்களாக இருப்போம்.

பணிவுடன்,

சி.நா.மீ.உ. பரிதாபேகம்

தலைவர், தஞ்சை முத்தமிழ் மன்றம், தஞ்சாவூர்

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *