திருவாரூரில் நடைபெற்ற பெரியார் நடை!

2 Min Read

சமூக நீதிக்காக பெரியார் நடை/ஓட்டம்

திருவாரூர், அக்.8- தந்தை பெரியார் 148ஆம் பிறந்த நாளை முன்னிட்டு மாவட்டங்களில் பெரியார் மாரத்தான் அல்லது பெரியார் நடை நிகழ்வு நடத்த வேண்டும் என்ற தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களது அறிவிப்பிற்கிணங்க திருவாரூர் மாவட்ட திராவிடர் கழகம் சார்பாக 04-10-2026 அன்று காலை சரியாக 6.30 மணிக்கு பெரியார் நடை நிகழ்வு நடைபெற்றது.

நிகழ்விற்கு மாவட்டத் தலைவர் SSMK.அருண்காந்தி தலைமையேற்று அனைவரையும் வரவேற்று பேசினார். மாநில விவசாய தொழிலாளர் அணிச் செயலாளர் வீ.மோகன், மாவட்டக் காப்பாளர் வீர.கோவிந்தராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பெரியார் நடை நிகழ்வினை மூத்த பத்திரிகையாளரும், தி.மு.க தகவல் தொழில் நுட்ப அணி மாநில பொறுப்பாளருமான கோவி.லெனின் சிறப்புரையாற்றி கொடியசைத்து நடையினை தொடங்கி வைத்தார்.

பெரியார் நடை நிகழ்வில் நகர மன்ற உறுப்பினர் ஜி.வரதராஜன், மக்கள் அதிகார கழக மாவட்ட பொறுப்பாளர் ஆசாத், மற்றும் செந்தில், மாவட்ட சிறு தொழில் சங்கப் பொதுச்செயலாளர்
பி.டி.பாபு, தி.மு.க தோழர்கள் வாரை சங்கர், அப்துல் ரஹ்மான் மற்றும் திராவிடர் கழக திருவாரூர் மாவட்ட துணைத் தலைவர் ஜெயராமன், மாவட்ட விவசாய தொழிலாளரணிச் செயலாளர் வீரையன், மாவட்ட தொழிலாளரணிச் செயலாளர் நேரு, இளைஞரணி மாவட்டத் தலைவர் ரவிக்குமார், மாவட்டச் செயலாளர் தமிழவன், நகர துணைத் தலைவர் சவு.சுரேஷ், நகர செயலாளர் செல்வேந்திரன், ஒன்றியத் தலைவர் கவுதமன், ஒன்றியச் செயலாளர்கள் வடகுடி பாஸ்கர், மஞ்சக்குடி அம்பேத்கர், நன்னிலம் ஆறுமுகம், முன்னாள் மண்டலச் செயலாளர் முனியாண்டி, ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர்கள் ஸ்டாலின் மற்றும் ரவி, தோழர்கள் க.சி.ராஜா, கோ.ராமலிங்கம், சுரேசன்,  தெய்வசிகாமணி, செந்தில்ராஜன், தமிழ்நேயன், வேதநாராயணன், கணேசன், வைத்தியநாதன், துரைராஜ், சந்திரன், செல்வகுமார், கிருஷ்ணமூர்த்தி,திலீபன், ரிதிக்ஸ்ராம், தி.அறிவுச்செல்வன், மணிமாறன், நாகை மாவட்டத் தோழர்கள் சிவானந்தம், இராச.முருகையன், குட்டிமணி உள்ளிட்ட 70க்கும் மேற்பட்ட கழகத் தோழர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டு நடந்து வந்தனர். திருவாரூர் காமராஜர் சிலை அருகில் தொடங்கிய நடையானது தெற்கு வீதி, மேலவீதி, வடக்கு வீதி, கீழவீதி, பனகல் சாலை வழியாக தந்தை பெரியார் சிலையை வந்தடைந்தது.

அவசரமாக சென்னை செல்ல வேண்டி இருந்ததால் நடைப்பயண நிகழ்வை தொடங்கி விட்டுச் செல்வதாக சொல்லி வந்த சிறப்பு விருந்தினர் கோவி.லெனின் மகிழ்வோடு முழு நிகழ்விலும்  தனது மகளோடு கலந்து கொண்டு நடைப்பயண நிறைவு இடமான பெரியார் சிலை வரை நடந்து வந்தார்.

அங்கு திராவிட மாணவ கழக மாநில இணைச் செயலாளர் மு.இளமாறன், மாநில மாணவர் கழக துணைச் செயலாளர் தேவ.நர்மதா ஆகியோர் முன்னிலையில் கோவி.லெனின் அவர்களின் மகள் நிலா பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து சிறப்பித்தார். நிறைவாக மாவட்டச் செயலாளர் கோ.பிளாட்டோ நன்றி கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *