ஆண்டிபட்டி நகர் திராவிடர் கழகம் சார்பாக “அறிவு ஆசான் ” தந்தை பெரியாரின் 148 – ஆம் ஆண்டு பிறந்தநாள் விழாவாக ஊர் பொதுமக்கள் மற்றும் கழகத் தோழர்கள் குருதிக்கொடை வழங்கி கொள்கைக் கொண்டாட்டம்!

2 Min Read

சமூக நீதிக்காக பெரியார் நடை/ஓட்டம்

ஆண்டிபட்டி, அக்.8- ஆண்டு தோறும் பெரியார் பிறந்த நாளை மய்யப்படுத்தி ஆண்டிபட்டி தந்தை பெரியார் குருதிக்கொடைக் கழகம், நோபிள் டோனத்ஸ் கிளப் இணைந்து 25ஆம் ஆண்டு ” வெள்ளி விழா” மாபெரும் குருதிக்கொடை முகாம் 04/10/2026 ஞாயிற்றுக்கிழமை ஆண்டிபட்டி கடைவீதி ஆரிய வைசியா மண்டபத்தில் நடைபெற்றது.

தலைமை வா.நேரு, மாநிலத் தலைவர் பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம், மதுரை, முன்னிலை: ச.இரகுநாகநாதன், காப்பாளர் தி.க போடி, ம.சுருளி ராசு, தலைவர் தேனி மாவட்டம், அ.மன்னர் மன்னன், பொதுக்குழு உறுப்பினர் உசிலை, மு.அன்புக்கரசன், பொதுக்குழு உறுப்பினர், பெரியகுளம், மணி கார்த்திக், வெற்றி தமிழர் பேரவை, தேனி மாவட்டம், கருப்பு சட்டை நடராஜன், கூடலூர்.

வரவேற்புரை: செ.கண்ணன், கழகப் பேச்சாளர், ஆண்டிபட்டி. குருதிக்கொடை முகாமை துவக்கி வைத்தவர்கள்: பெரியார் நெறியாளர் பி.வரதராசன், தாளாளர் மணியம்மை மழலையர் பள்ளி, வடக்கு மாசி வீதி, மதுரை. ம.ஜோசு, நிறுவனர், நோபிள் டோனஸ் கிளப், அவைத்தலைவர் இந்திய செஞ்சிலுவைச் சங்கம், மதுரை.

முதல் குருதிக்கொடை வழங்கியவர்கள்: ஸ்டார்.சா.நாகராசன், கழகத் துணைத் தலைவர், தேனி மாவட்டம். இரா. ஆண்டிச்சாமி, நகர் கழகத் தலைவர்.

நிகழ்வில்: ஆண்டிபட்டி குருதிக்கொடை முகாமை வேடிக்கை பார்த்த மழலையர் அனைவரும் குருதிக்கொடை வழங்கினார்கள்.

ஸ்டார் நா.ஜீவா, கா.ம.அரி விஸ்வநாத், ஆ.தனுஷ் இவர்கள் வருங்காலங்களில் பொதுச் சேவையை எடுத்துச் செல்லும் செயல்வீரர்கள் மற்றும் சுற்றுவட்டார பொதுமக்கள் வழக்கம்போல் தன்னார்வமாக  வந்தார்கள், ஒரத்தநாடு ஒன்றிய கழக ராமகிருஷ்ணன், பொறியாளர் பாலகிருஷ்ணன் ஆகியோர் குருதிக்கொடை வழங்கியது மிகச் சிறப்பான நிகழ்வு.

இந்த ஆண்டு பெண்களும் அதிகம் பங்கு பெற்றனர். இளைஞர்கள், சிறைக் காவலர்கள், மனிதநேய காப்பக இயக்குநர், மாணவ, மாணவிகளும் கலந்து கொண்டனர்.

குருதிக் கொடையாளர்கள் அனைவருக்கும்  ‘அகமகிழ்’ சத்துமாவு உருண்டை, பிஸ்கட் மற்றும் உணவு ஸ்டார்  இனிப்பகம், ஸ்டார் அறக்கட்டளை சார்பாக வழங்கப்பட்டது.

குருதிக்கொடை முகாமில்  நூற்றுக்கு மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர் தகுதியுள்ள கொடையாளர்கள் 70 க்கு மேற்பட்டவர்கள் குருதி வழங்கினார்கள் சேகரித்த இரத்த யூனிட்டுகள் அனைத்தும் அரசு மருத்துவமனை பெரியகுளம், மதுரை இரத்த வங்கிகளுக்கு நன்கொடையாக வழங்கப்பட்டது.

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி நகர திராவிடர் கழகம் நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *