மதுரை, ஜூன் 4- 1-06-2026 மதுரை மீனாட்சிபுரத்தில் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் 103ஆவது பிறந்தநாள் கூட்டம் நடந்தது.
கூட்டத்திற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து மாவட்ட துணைத் தலைவர் இரா.திருப்பதி தலைமையுரையாற்றினார். பெ.தனசேகரன் வரவேற்புரை யாற்றினார். கூட்டத்தில் மாவட்டத் தலைவர் அ.முருகானந்தம், காப் பாளர் சே.முனியசாமி, மாவட்ட செயலாளர் இராலீ.சுரேஷ் பகுத் தறிவாளர் கழக மாவட்டத் தலைவர் ச.பால்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்
கழக சொற்பொழிவாளர் அ.வேங்கைமாறன். தற்போது தமிழ் நாட்டின் அரசியல் நிலவரங்களை எடுத்துரைத்தார். திராவிட இயக்க தமிழர் பேரவை துணை பொதுச் செயலாளர் வழக்குரைஞர் இராம.வைரமுத்து உரையில் கலைஞர் அவர்களின் ஆட்சியில் தமிழர்கள் கல்வி. வேலை.உரிமைகாப்பு மக்கள் முன்னேற்றம் ஆகியவற்றில் கலைஞரின் அறிவாற்றல் மிக்க முன்னெடுப்புகள் தமிழ் நாட்டின் முன்னேற்றத்திற்கு அடிப்படையான கட்டமைப்பை தளத்தை உருவாக் கியதை எடுத்துக் கூறினார்.
பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தின் மாநில தலைவர் முனை வர் வா.நேரு கலைஞர் அவர்கள் தமிழ் இனத்திற்கும் மொழிக்கும் செய்த பணிகளை எடுத்துரைத்த தோடு அரசுப்பணியில் விரைந்து எடுக்கும் முடிவுகளின் சாதுர்யம் குறித்த செய்திகளை பட்டியலிட்டார்.
நிறைவாக கழக சொற்பொழி வாளர் இராம.அன்பழகன் சுமார் ஒரு மணிநேரம் டாக்டர் கலைஞர் அவர்களுக்கு புகழாரம் சூட்டினார் தமிழ் நாட்டின் வளர்ச்சிக்கு கலைஞர் அவர்களின் ஆற்றல் மிக்க நிர்வாகத்திறன் சிறந்த வழிகாட்டியது. காமராஜர் ஆட்சிக்கு பிறகு அவர் காலத்தில் தான் அனைவரும் தொடக்கக் கல்வியிலிருந்து உயர் கல்வி வரை ஏழை எளிய மக்கள் கல்வி கற்க ஏராளமான சலுகைகள் வழங்கி கல்விப் புரட்சிக்கு வித்திட்டார். கலைஞரின் ஆட்சி தமிழர்களின் பொற்காலம் என வர்ணித்தார். தமிழ்நாட்டு தலைவர்களில் பெரியாரின் குருகுலத்தில் பயின்று, கற்று, திரைத்துறைக்கு சென்று கதை வசனகர்தாவாக வெற்றி பெற்று, பேச்சாளராக, எழுத்தாளராக, அரசியலில் வாழ்ந்த காலம் வரை சட்டமன்ற உறுப்பினராக, தமிழ் நாட்டின் சிறப்பு மிக்க முதலமைச்சராக வாழ்ந்து தமிழ் நாட்டின் வழிகாட்டி முதலமைச்சராக வாழ்ந்து மறைந்த கலைஞரின் புகழ் வரலாற்றில் எவராலும் மறைக்க முடியாது என உரையாற்றினார். கூட்டத்தில் முன்னாள் மாவட்டச் செயலாளர் க.அழகர், மகளிரணிச் செயலாளர் தி.அஜிதா, இளைஞரணி அமைப்பாளர் ச.வேல்துரை, பார்க்டவுன் கனி, அன்புமணி மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். கட்டட காண்ராக்டர் சண்முகம் நன்றி கூறினார்.
