குஜராத் மாநிலத்துக்குத் தொடர்ந்து முன்னுரிமை உச்சநீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் பாரபட்சமா? ஏழு மாநிலங்களுக்கு வாய்ப்பு அளிக்காமல் புறக்கணிப்பு!

2 Min Read

சமூக நீதிக்காக பெரியார் நடை/ஓட்டம்

புதுடில்லி, அக்.8– உச்ச நீதிமன்றத்தில் அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்த வேளையில், 7 மாநில உயர் நீதிமன்றங்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் புறக்கணிக்கப்பட்டு உள்ளது.

வெளிப்படைத்தன்மை அளிக்கப்பட வேண்டும்!

இந்திய நீதித்துறையின் உச்ச அமைப்பான உச்ச நீதிமன்றத்திற்கு பல்வேறு மாநில உயர் நீதிமன்றங் களில் பணியாற்றும் நீதிபதிகள் கொலீஜியம் அமைப்பின் பரிந்துரையின்படி நிய மிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நடைமுறையில் நாட்டின் அனைத்துப் பகுதி உயர் நீதிமன்றங்களுக்கும் சமமான பிரதிநிதித்துவம் மற்றும் வெளிப்படைத்தன்மை அளிக்கப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

இந்நிலையில், தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான உச்ச நீதிமன்ற கொலீஜியம் கடந்த செப்டம்பர் 28 ஆம் தேதி கூடி எடுத்த முடிவின்படி, குஜராத் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த சுனிதா அகர்வால், டில்லி தலைமை நீதிபதி டி.கே.உபாத்யாயா. தெலங்கானா தலைமை நீதிபதி அபரேஷ் குமார் சிங் ஆகிய 3 பேர் உச்ச நீதிமன்ற நீதிபதிகளாகப் பதவியேற்றுக்கொண்டனர். இதில் சுனிதா அகர்வால், டி.கே.உபாத்யாயா ஆகிய இருவரும் தாய் நீதிமன்றமாக அலகாபாத் உயர் நீதிமன்றத்தையும், அபரேஷ் குமார் சிங் ஜார்கண்ட் உயர் நீதிமன்றத்தையும் சேர்ந்தவர்கள் ஆவர்.

பணி மூப்பு திட்டமிட்டுப் பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளது!

அகில இந்திய நீதிபதிகள் பணி மூப்புப் பட்டியலில் முறையே 4, 5, 6 ஆகிய இடங்களில் இருந்த இவர்களைப் பரிந்துரைத்த தன்மூலம், ஹரீஷ் தாண்டன், சவுமென் சென், ஜி.எஸ்.சந்த வாலியா ஆகிய 3 தலைமை நீதிபதிகளின் பணி மூப்பு திட்டமிட்டுப் பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளது பெரும் சர்ச்சையையும் கேள்விகளையும் கிளப்பியுள்ளது.

இந்த புதிய நியமனங்களின் மூலம் உச்ச நீதிமன்றத்தில் அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் பிரதிநிதித்துவம் 4 ஆக உயர்ந்து முதலிடத்தைப் பிடித்துள்ளது.

இவர்களைத் தொடர்ந்து குஜராத், மத்திய பிரதேசம். பஞ்சாப் மற்றும் அரியானா உயர்நீதி மன்றங்களைச் சேர்ந்த தலா 3 நீதிபதிகளும், மும்பை, கொல்கத்தா, டில்லி, ஜார்கண்ட், கருநாடகா, சென்னை மற்றும் ராஜஸ்தான் உயர் நீதிமன்றங்களிலிருந்து தலா 2 நீதிபதிகளும் உச்ச நீதிமன்றத்தில் அங்கம் வகிக்கின்றனர். மேலும் ஆந்திரா, சட்டீஸ்கர், கேரளம், பாட்னா, கவுகாத்தி, மணிப்பூர், தெலங்கானா ஆகிய உயர் நீதி மன்றங்களில் இருந்து தலா ஒருவர் என உள்ளனர்.

ஆனால் இமாச்சல பிரதேசம், ஜம்மு–காஷ்மீர் மற்றும் லடாக். மேகாலயா, ஒடிசா, சிக்கிம், திரிபுரா, உத்தரகாண்ட் ஆகிய 7 உயர் நீதிமன்றங்களில் இருந்து உச்ச நீதிமன்றத்தில் ஒரு நீதிபதிகூட இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. அரசிய லமைப்புச் சட்டப்பிரிவு 124 இன் கீழ் நியமனங்கள் நடக்கும் சூழலில், பிரதிநிதித்துவம் இல்லாத மாநிலங்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்படும் அபாயம் உள்ளதாகவும், ஒன்றிய அரசு மற்றும் கொலீஜியம் நடத்தும் இந்த சமரசப் போக்கால் உச்ச நீதிமன்றம் அனைத்துத் தரப்பையும் உள்ளடக்கிய அமைப்பாக நீடிக்குமா என்றும் சட்ட வல்லுநர்கள் எச்ச ரித்துள்ளனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *