தந்தை பெரியார் பிறந்த நாள் விழா சிறப்புக் கருத்தரங்கம்

1 Min Read

சமூக நீதிக்காக பெரியார் நடை/ஓட்டம்

ஒழுகினசேரி, அக். 7- 17.9.2026 அன்று நாகர்கோவில் ஒழுகினசேரி யில் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா – சிறப்புக் கருத்தரங்கம் மாவட்ட கழகத் தலைவர் மா.மு.சுப்பிரமணியம் தலைமையில் நடைபெற்றது.

மாவட்ட கழகச் செயலாளர் கோ.வெற்றிவேந்தன் முன்னிலை வகித்து உரையாற்றினார். கழக காப்பாளர் ம.தயாளன், மாவட்ட துணைத் தலைவர் ச.நல்ல பெருமாள், பகுத்தறிவாளர் கழக தலைவர் உ.சிவதானு, இலக்கிய அணிச் செயலாளர் பா.பொன்னுராசன், துணைச் செயலாளர் எஸ்.அலெக் சாண்டர் ஆகியோர் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்தனர்.

துணை செயலர் சி.அய்சக் நியூட்டன், தொழிலாளர் அணிச் செயலாளர் க.யுவான்ஸ், நாகர்கோவில் மாநகரத் தலைவர் ச.சகருணாநிதி, பகுத்தறிவாளர் கழகச் செயலாளர் மு.பெரியார் தாஸ், கோட்டாறு பகுதி தலைவர் ச.ச.மணிமேகலை, கழகத் தோழர்கள் ம.செல்வராசு, கூடங்குளம் பால கிருஷ்ணன், எ.ச.காந்தி, தங்கராஜ், பி. கென்னடி, தோவாளை ஒன்றிய செயலாளர் ந.தமிழரசன், மாவட்ட மகளிர் பாசறைச் செயலாளர் மஞ்சு குமாரதாஸ் உட்பட பலரும் பங்கேற்றனர்.பெரியார் பெருந் தொண்டர் பாறைக்காவிளை மு.பால் மணி நன்றி கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *