கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 7.10.2026

சமூக நீதிக்காக பெரியார் நடை/ஓட்டம்

டெக்கான் கிரானிக்கல், சென்னை:

* எதிர்க்கட்சிகளின் போராட்டம் – ராகுல் காந்தி மற்றும் இந்தியா கூட்டணித் தலைவர்கள் கைது. வாக்குத் திருட்டுக் குற்றச்சாட்டில் தலைமைத் தேர்தல் ஆணையர் பதவி விலகக் கோரி, ஆகாஷ்வாணி பவனில் 9 மணி நேரம் போராடிய ராகுல் காந்தி உள்ளிட்ட இண்டியா கூட்டணி தலைவர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். பின்னர் விடுவிக்கப்பட்ட நிலையில், போராட்டத்தை தீவிரப்படுத்த எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன; மேலும் பிஜூ ஜனதா தளம் உள்ளிட்டக் கட்சிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தன.

* தமிழ்நாடு இடைத்தேர்தல்களில் வாக்குப்பதிவு குறைவு: மதுராந்தகம், தாராபுரம் மற்றும் தட்டாஞ்சாவடி தொகுதிகளில் கடந்த தேர்தலை விட வாக்குப்பதிவு சதவீதம் குறைந்தது. பெண்கள், இளைஞர்கள் அதிகமாக வாக்களிக்க வரிசையில் நின்றனர்; சில வாக்குச்சாவடிகளில் இவிஎம் தொழில்நுட்பக் கோளாறுகளும் ஏற்பட்டன.

* “ஒரே நாடு, ஒரே கட்சி” என பாஜக விரும்புகிறது – கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் தீப்கே குற்றச்சாட்டு: பாஜக “ஒரே நாடு, ஒரே தேர்தல்” என்ற பெயரில் “ஒரே நாடு, ஒரே கட்சி” என்ற அரசியல் நோக்கத்தை முன்னெடுக்கிறது என சி.ஜே.பி. தலைவர் அபிஜித் தீப்கே குற்றச்சாட்டு. மாணவர் அமைப்புகளின் போராட்டத்தை ஒடுக்க டில்லி காவல்துறையினர் அதிகப்படியான வலிமையைப் பயன்படுத்தியதாகவும் விமர்சனம்.

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* தெலங்கானாவில் ‘சட்டவிரோதப்’ படிவம் 7 குறித்து முதல் வழக்கு: முஸ்லிம் வாக்காளர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கக் கோரி 30 படிவம் 7 மனுக்களை தாக்கல் செய்த பாஜக வாக்குச் சாவடி முகவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. முஷீராபாத் தொகுதியில் நடைபெற்ற இந்த சம்பவம் குறித்து தெலங்கானாவில் முதல்முறையாக எப்.அய்.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தி இந்து:

* தாராபுரம் தவெக வேட்பாளர் சத்தியபாமா மீது தேர்தல் செலவு முறைகேடு புகார்: தேர்தல் பணிகளுக்காக சுமார் ரூ.14 லட்சம் செலவிடப்பட்டதாகக் கூறிய காணொலியை அடிப்படையாகக் கொண்டு, தவெக வேட்பாளர் சத்தியபாமா மீது தேர்தல் ஆணையத்தில் திமுக சார்பில் புகார் அளிக்கப்பட்டது. ஓட்டல், விமானப் பயணம் உள்ளிட்ட செலவுகள் தேர்தல் விதிமுறைகளை மீறியவை என புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

* எஸ்.அய்.ஆர்-அய் ‘தேசத்துரோகம்’ என விமர்சித்த ராகுல்; தேர்தல் ஆணையம் தலைமையகத்துக்கு செல்லும் பேரணி தடுக்கப்பட்டதை தொடர்ந்து, ராகுல் காந்தி ஆகாஷ்வாணி பவனில் போராட்டத்தில் ஈடுபட்டார்; இந்தியா கூட்டணித் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாரை பதவி நீக்கம் செய்ய வேண்டும், எஸ்.அய்.ஆர்-அய் நிறுத்த வேண்டும் மற்றும் நீக்கப்பட்ட வாக்காளர் பெயர்களை மீண்டும் சேர்த்தல் ஆகியவற்றை எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின.

தி டெலிகிராப்:

* சர்வாதிகாரி ஏன் பயப்படுகிறார்?’–அபிஜித் தீப்கே கேள்வி: அக்டோபர் 10 போராட்டத்திற்கு முன் சி.ஜே.பி. உறுப்பினர்களின் சமூக ஊடக கணக்கு களை அரசு கட்டுப்படுத்த முயற்சிப்பதாக தீப்கே குற்றச்சாட்டு.  ஜந்தர் மந்தர் மற்றும் அதைச் சுற்றிய 1.5 கி.மீ. பகுதியில் அக்டோபர் 2 அன்று காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை இணைய சேவை களை நிறுத்த உத்தரவிடப்பட்டதாகவும் புகார்.

– குடந்தை கருணா

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *