தடகளப்போட்டி, சதுரங்கப்போட்டி மற்றும் சிலம்பம் போட்டிகளில் பெரியார் மணியம்மை பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் சாதனை!

சமூக நீதிக்காக பெரியார் நடை/ஓட்டம்

திருச்சி, அக்.7- 11ஆம் வகுப்பு டி.யோகதர்ஷினி முதலமைச்சர் கோப்பைக்கான தடகளப் போட்டியில் 100 மற்றும் 200மீ போட்டியில் 2ஆம் இடம் பெற்று கோப்பையையும் சான்றிதழையும் வென்றார். அதைத் தொடர்ந்து மாநில அளவிலான தடகளப்போட்டியில் 80மீ Hurdlesஇல் 2ஆம் இடமும் பெற்று 41ஆவது ஜூனியர் நேசனல் லெவல் போட்டிக்கு தகுதி பெற்று சாதனை படைத்துள்ளார்.
8ஆம் வகுப்பு மாணவி பிஎம்.சாத்விகா, 3ஆவது திருச்சி மாவட்ட அளவில் நடைபெற்ற சதுரங்கப் போட்டியில் முதலாம் இடம் பெற்று கோப்பையையும் சான்றிதழையும் வென்று சாதனை படைத்துள்ளார்.
8ஆம் வகுப்பு மாணவி ஆ.ரிஷித்தா திருச்சி மாவட்ட அளவிலான சப் ஜூனியர் (Sub Junior) சிலம்பம் போட்டியில் ஸ்பேரிங் (Sparring) மற்றும் தனிப்பிரிவில் 3ஆம் இடம் பெற்று வெண்கலப்பதக்கமும் சான்றிதழும் வென்று பள்ளிக்குப் பெருமை சேர்த்தார்.
இம்மாமாணவிகளுக்கு பள்ளித் தலைமையாசிரியை மற்றும் ஆசிரியர்கள் வாழ்த்துகளையும், பாராட்டுதல்களையும் தெரிவித்து மாணவிகளை ஊக்கப்படுத்தினர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *