மயிலாடுதுறையில் தந்தை பெரியார் 148ஆம் பிறந்த நாள் விழா கருத்தரங்கம்!

சமூக நீதிக்காக பெரியார் நடை/ஓட்டம்

மயிலாடுதுறை, அக். 6- பகுத்தறிவாளர் கழகம் மற்றும் பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தின் சார்பில் மயிலாடுதுறையில்  தந்தை பெரியார் 148ஆம் பிறந்தநாள் விழா 5.10.2026 அன்று மாலை 6 மணிக்கு மாவட்ட கழகத் தலைவர் கடவாசல் குணசேகரன் தலைமையில் பெரியார் இசையுடன் தொடங்கியது. மாவட்ட இளைஞரணித் தலைவர் கா.அருள்தாஸ் இயக்கப் பாடல்களைப் பாடினார்.

மாவட்ட பகுத்தறிவா ளர் கழகத் தலைவர் இரெ.செல்லதுரை அனைவரை யும் வரவேற்க, நகர கழகத் தலைவர் சீனி.முத்து, ஒன்றிய கழகத் தலைவர் அ.சாமிதுரை, குத்தாலம் பேரூராட்சி கழகத் தலைவர் சா.ஜெகதீசன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். தந்தை பெரியார் அவர்களின் படத்தை கழக மாவட்ட செயலாளர் கு.இளமாறனும், பேரறிஞர் அண்ணா அவர்களின் படத்தினை மயிலாடுதுறை நகர செயலாளர் பூ.சி.காமராஜும் திறந்து வைத்தனர்.

பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற துணைத் தலைவர் ஞான.வள்ளுவன் தொடக்க உரை ஆற்ற, தமிழ் மண் தன்னுரிமை இயக்க அமைப்பாளர் பேராசிரியர் த.ஜெயராமன் அவர்கள் “பெரியார் எனும் அரண்!” என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். அவர் தனது உரையில் தமிழர்களின், குறிப்பாக தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப் பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களின் கடந்த கால நிலை எவ்வளவு மோசமாக இருந்தது என்பதை எடுத்துக் காட்டி, இந்த நாட்டிற்கு வெள்ளைக்கார ஆட்சியும், நீதிக் கட்சியும், திராவிட இயக்கமும், தந்தை பெரியாரும் கிடைத்திருக்காவிட்டால் நமது நிலை எப்படி இருந்திருக்கும் என்பதை வரலாற்றுச் சான்றுகளோடு எடுத்துரைத்தார்.

மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர் தங்க செல்வராஜ் நன்றி கூறினார். மயிலாடுதுறை கி.தளபதிராஜ் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார் அனைவருக்கும் தேநீர் விருந்து அளிக்கப்பட்டது.

இந் நிகழ்வில் மேனாள் வங்கி மேலாளர்கள் திராவிடமணி, சே.ஆறாமதி, மேனாள் வட்டாட்சியர் இராமகிருஷ்ணன், துணை ஆட்சியர் மகாலிங்கம், மயிலாடுதுறை நகர திராவிடர் கழக துணைத் தலைவர் இரெ.புத்தன், சீர்காழி ஒன்றிய திராவிடர் கழக செயலாளர் கடவாசல் செல்வம், மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் கு.இளஞ் செழியன், விடுதலை வாசகர் வட்ட அமைப்பாளர் ஜெகன்.சாமிக்கண்ணு, பகுத்தறிவாளர் கழக தோழர்கள் இரெ.ரஷீத்கான்  பி.ராஜேந்திரன், கே.ஜி.நாகராஜன், கதிரவன், வினோத், கார்த்திகேயன், ரஞ்சித்குமார், கொக்கூர் திமுக பொறுப்பாளர்கள் கலைக்குமார், கலையரசன், தமிழ் மண் தன்னுரிமை இயக்க தோழர் சித்ரா ஜெயராமன், தமிழர் உரிமை இயக்கத் தோழர் சுப்பு.மகேஷ், பெரியார் பிஞ்சு தமிழ்நிலவன் மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த தோழர்கள் கலந்து கொண்டனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *