விருத்தாசலம், மே 14- விருத் தாசலம் கழக மாவட்டம் வலசை சிற்றூரிலுள்ள பெரியார் இல்லத்தில் தந்தை பெரியார் சிலை திறப்பு விழா ஏப்.29 ஆம் நாள் நடைபெற்றது.
விருத்தாசலம் கழக மாவட்ட இளைஞரணிச் செயலாளரும், பொதுக்குழு உறுப்பினருமான சே. பெரியார்மணியின் இல்லத்தில் தந்தை பெரியார் முழு உருவச்சிலை திறப்பு விழா மற்றும் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் பிறந்தநாள் விழா கழக ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார் தலைமையில் நடை பெற்றது.
நிகழ்ச்சியின் தொடக்கத்தில் மாவட்ட இளைஞரணிச் செயலா ளர் சே.பெரியார் மணி வரவேற்பு ரையாற்றினார். மாவட்டக் காப்பாளர் அ.இளங்கோவன், மாவட்டத் தலைவர் த.சீ. இளந்திரையன், மாவட்டச் செயலாளர் ப.வெற்றிச் செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கழகப் பொதுச்செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் தந்தை பெரியார் அவர்களின் சிலையைத் திறந்து வைத்து தந்தை பெரியாரின் சிறப்புகள் குறித்தும், புரட்சிக்கவிஞரின் சிறப்பியல்புகள் பற்றி விரிவாகப் பேசினார்.
கூட்டத்தில் மாநில இளைஞரணிச் செயலாளர் நாத்திக.பொன்முடி, மாவட்ட துணைத் தலைவர் அ.பன்னீர்செல்வம், மாவட்ட துணைச்செயலாளர் பி.பழனிச்சாமி, பொதுக்குழு உறுப்பினர் தங்க. இராசமாணிக்கம், பெண்ணாடம் நகர தலைவர் செ.கா.ராஜேந்திரன், திட்டக்குடி நகரத் தலைவர் வெ.அறிவு, விருத்தாசலம் ஒன்றிய தலைவர் கி.பாலமுருகன், செயலாளர் கா.குமரேசன், செ. இராமராஜ், விருத்தாசலம் நகர செயலாளர் மு.முகமது பஷீர், கழக சொற்பொழிவாளர் புலவர் இராவணன், கம்மாபுரம் ஒன்றிய தலைவர் த. தமிழ்ச்செல்வன், வேப்பூர் வட்டார செயலாளர் ம.இளங்கோவன், மாவட்ட இளை ஞரணி துணைத் தலைவர்கள் வெங்கட.ராசா, ஆ.செந்தில், மாவட்ட மாணவர் கழகச் செயலாளர் சு.தமிழ்ச்செல்வன், உளுந்தூர்பேட்டை ஒன்றியத் தலைவர் செல்வ சக்திவேல், நபாவேந்தர் விரும்பி, ஆவட்டி முருகேசன், நூலகர் கண்ணன், வடக்குத்து கனகராஜ், சிதம்பரம் மாவட்ட இளைஞரணித் தலைவர் சிற்பி சிலம்பரசன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
குடும்பத்தினருக்கு சிறப்பு:
தந்தை பெரியார் சிலை திறப்பு விழா சிறப்பாக நடைபெற ஒத்துழைத்த பெரியார்மணி அவரது வாழ்விணையர் ஆனந்தி, பெரியார் பிஞ்சுகள் மணியம்மை, பெரியார் செல்வி, பெரியார் மணி தாயார் சரோஜா ஆகியோருக்கு கழகப் பொதுச்செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் சிறப்பு செய்தார்.
நிறைவாக மாவட்ட இளை ஞரணித் தலைவர் செ. சிலம்பரசன் நன்றி கூறினார்
