ஆரல்வாய்மொழி மாடசாமி மறைவு கழக நிர்வாகிகள் இறுதி மரியாதை

சமூக நீதிக்காக பெரியார் நடை/ஓட்டம்

ஆரல்வாய்மொழி, அக். 6- திராவிடர் கழக பொதுக்குழு உறுப்பினர் ஆரல்வாய்மொழி மா.மணி, மா.இசக்கியம்மாள், மா.நாராயணன், மா.மல்லிகா, மா.முத்து கிருட்டிணன் ஆகியோரின் தந்தையாரும், நாராயண வடிவு அம்மையாரின் இணையருமான மாடசாமி (வயது 91) 3.10.2026 அன்று மறைவுற்றார்.

இறுதி நிகழ்ச்சி 4.10.2026 காலை 11 மணிக்கு ஆரல்வாய்மொழியில் நடைபெற்றது. மாநில கழக ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு இரா.குண சேகரன், கன்னியாகுமரி மாவட்டத் தலைவர் மா.மு.சுப்ரமணியம், மாவட்டச் செயலாளர் கோ.வெற்றிவேந்தன், மாவட்ட துணைத்தலைவர் ச.நல்லபெருமாள், மாவட்ட தொழிலாளரணிச் செயலா ளர் க.யுவான்ஸ், மாவட்ட மகளிர்பாசறைதலைவர் மஞ்சு குமார், கோட்டாறு கழகத் தலைவர் ச.ச.மணி மேகலை, ச.ச.சத்தியாராணி ஆகியோர் சென்று வீர வணக்க முழக்கத்துடன் இறுதி மரியாதை செலுத்தினார். தமிழர் தலைவர் அவர்களின் சார்பில் ஆழ்ந்த இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *