டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* மும்பையில் மக்கள் திரள்; டில்லியில் கைது – தலைமைத் தேர்தல் ஆணையருக்கு எதிரான போராட்டம் தீவிரம்: மும்பையில் ஆயிரக்கணக்கானோர் திரண்டு, தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி போராட்டம் நடத்தினர்; டில்லி ஜந்தர் மந்தரில் சுமார் 700 பேர் கைது செய்யப்பட்டனர். எஸ்.அய்.ஆர் எனப்படும் வாக்காளர் பட்டியலின் சிறப்பு தீவிரத் திருத்தத்திற்கு எதிராக எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன;
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* மூவர்ணக் கொடிகளுடன் தலைமைத் தேர்தல் ஆணையருக்கு எதிராக கரப்பான் பூச்சி ஜனதா கட்சி போராட்டம்: மும்பை சிவாஜி பூங்காவில் சி.ஜே.பி. நடத்திய போராட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று, தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி முழக்கமிட்டனர்.
* டில்லி ஜந்தர் மந்தரில் எதிர்க்கட்சிகள் மற்றும் மாணவர் அமைப்புகளின் போராட்டத்தில் 700-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்; வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பாகக் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
* படிவம் 6-அய் மாற்றியது யார்? உச்சநீதிமன்றம் கேள்வி – தேர்தல் ஆணையம், தலைமைத் தேர்தல் ஆணையர் மீது கண்காணிப்பு: வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும் படிவம் 6இல் மாற்றம் செய்தது யார்? என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பி, எஸ்.அய்.ஆர் தொடர்பான பதிவுகளை தேர்தல் ஆணையத்திடம் கோரியுள்ளது. வாக்காளர் பட்டியல் முறைகேடுகள் குறித்து எதிர்க்கட்சிகள் போராட்டம் தீவிரப்படுத்தியுள்ள நிலையில், தேர்தல் ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிடவும் திட்டமிட்டுள்ளன.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* “பாஜகவை தோற்கடிப்பதே முக்கியம்”: அகிலேஷ் கருத்துக்கு தி.மு.க. ஆதரவு: உத்தரப் பிரதேச தேர்தலில் கூட்டணி வெற்றி பெற்று பாஜகவை தோற்கடிப்பதே முக்கியம்; எந்தக் கட்சிக்கு 2 அல்லது 3 இடங்கள் கூடுதலாக கிடைக்கிறது என்பது முக்கியமல்ல — அனைவரும் ஒன்றுபட்டு பாஜகவை தோற்கடிக்க வேண்டும் என திமுக செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன் கருத்து.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* “பிரதமர், உள்துறை அமைச்சரின் உத்தரவின் பேரில் அரசியலமைப்புக்குத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் துரோகம் செய்தார்”: காங்கிரஸ் குற்றச்சாட்டு.
* தேர்தல் ஆணையத்தின் முடிவுகள் ஒருமனதாகவோ அல்லது பெரும்பான்மை அடிப்படையிலோ எடுக்கப் பட வேண்டும் என உச்சநீதிமன்றம் தெரிவித்தது; தேர்தல் ஆணையம் மற்றும் ஒன்றிய அரசுக்கு அறிவிக்கை அனுப்பப்பட்டதைத் தொடர்ந்து காங்கிரஸ் கடும் குற்றச்சாட்டு.
தி இந்து:
* அமைச்சர்கள், தவெக தகவல் தொழில்நுட்பப் பிரிவுக்கு எதிராக அவதூறு வழக்குத் தொடர திமுகவுக்கு உயர்நீதிமன்றம் அனுமதி: அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, சி.டி.ஆர். நிர்மல் குமார் மற்றும் தவெக அய்.டி. பிரிவுக்கு எதிராக ₹1 கோடி இழப்பீடு கோரி அவதூறு வழக்குத் தொடர திமுகவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
தி டெலிகிராப்:
* “செயல்படாத தேர்தல் ஆணையம் இருக்கக் கூடாது”, உச்ச நீதிமன்ற நீதிபதி உஜ்ஜல் பூயனுக்குப் பிறகு முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி ரோஹின்டன் நாரிமன் கண்டனம். வாக்காளர் நீக்கங்களின் அளவு எஸ்.அய்.ஆர் நடவடிக்கையை நிறுத்த உச்சநீதிமன்றத்தை தூண்டாதது ஏன் என முன்னாள் நீதிபதி ரோஹின்டன் நாரிமன் கேள்வி; தேர்தல் ஆணைய நியமனங்கள் தொடர்பான சட்டத்தை விரைவாகத் தீர்மானிக்கவும் வலியுறுத்தல்.
– குடந்தை கருணா
