நாகர்கோயில், ஆக. 3- திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் எழுதிய ஆர்.எஸ். எஸ். என்னும் டிரோஜன் குதிரை, ஆர். எஸ். எஸ். பற்றி ஆகிய நூல்கள் அறிமுக விழா நாகர்கோவில் பெரியார் மய்யத்தில் வைத்து நடைபெற்றது.
பகுத்தறிவாளர் கழக மாவட் டத் தலைவர் உ.சிவதாணு தலைமை தாங்கினார். குமரி மாவட்ட பகுத்தறிவாளர் கழக மாவட்ட செயலாளர் பெரியார் தாஸ் வரவேற்புரையாற்றினார். பெரியார் பெருந்தொண்டர் சி. கிருஷ்ணேஷ்வரி பங்கேற்றார் மாவட்ட கழகத் தலைவர் மா.மு.சுப்பிரமணியம் மாவட்டச் செயலாளர் கோ. வெற்றிவேந்தன் மாவட்ட காப்பாளர் ம. தயாளன் ஆகி யோர் முன்னிலை வகித்து உரையாற்றினார். திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு இரா. குணசேகரன் தொடக்க உரையாற்றினார். கழக சொற்பொழிவாளர் இரா.பெரியார் செல்வன் விரிவாக சிறப்புரையாற்றினார். பொதுக்குழு உறுப்பினர் மு. இராஜசேகர், மாவட்ட துணைச் செயலாளர் எஸ். அலெக்சாண்டர் சி. அய்சக் நியூட்டன் இலக்கிய அணிச் செயலாளர் பா. பொன்னுராசன் தொழிலாளர் அணி செயலாளர் க. யுவான்சு கோட்டார் பகுதி தலைவர் ச.ச.மணிமேகலை கழகத் தோழர்கள் முத்து வைரவன் ஆதித்தன் கார்மல் மற்றும் ஏராளமானர் கலந்து கொண்டு ஆர்எஸ்எஸ் என்னும் டிரோஜன் குதிரை நூலினை ஆர்வமுடன் பெற்றுக் கொண்டனர்.
