பாப்பிரெட்டிப்பட்டி அக். 6- தந்தை பெரியார் அவர்களின் 148 ஆம் ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு சமத்துவம், சமூகநீதி, சுயமரியாதையை வலியுறுத்தியும், சமூக சேவையாற்றும் கழகத் தோழர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட அனைவரின் உடல்நலம், உள்ள நலம் பாதுகாக்க வேண்டி தினம், தினம் நடைப்பயிற்சி மேற்கொள்வது அவசியம் என கருதி திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களின் அறிவிப்பின்படி தமிழ்நாடெங்கும் எழுச்சி நடைப் பயணம் நடைபெற்று வருகிறது.
அதன் அடிப்படையில் அரூர் மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் அக்டோபர் 3ஆம் தேதி காலை 8 மணி அளவில் மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் அ.தமிழ்ச்செல்வன் தலைமையில், திராவிடர் கழகப் பொதுக்குழு உறுப் பினர்கள் வேங்கை தமிழ்ச் செல்வன், இளங்கோ, காப்பாளர் தனசேகரன், பாப்பி ரெட்டிப்பட்டி பேரூராட்சித் தலைவர் செங்கல் மாரி, பாவலர் பெரு.முல்லையரசு, கவிஞர் கீரை. பிரபாகரன், ஒன்றியத் தலைவர் சி.அழகிரி, ஒன்றியச் செயலாளர் பொன் அய்யனார் ஆகியோர் முன்னிலையில் மாவட்ட திராவிடர் கழகச் செயலாளர் கு.தங்கராஜ் வரவேற்றார்.
வெங்கடசமுத்திரத்தில் பெரியார் பெருந்தொண்டர் வி ஆர் வேங்கன் அவர்களால் நிறுவப்பட்ட தந்தை பெரியார் சிலைக்கு நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் பகுத்தறிவு கலைத்துறை செயலாளர் மாரி. கருணாநிதி பெரியார் பெருந்தொண்டர்கள், கழகத் தோழர்கள் கொள்கை முழக்கமிட மாலை அணிவித்தனர். வருகை தந்த அனைவருக்கும் பெரியார் பெருந்தொண்டர் வி ஆர் வேங்கன் அவர்களின் பேரன் ராஜவேங்கன் தேநீர் அளித்தார்.
நடைப்பயணத்தை மாநில திராவிடர் கழக ஒருங்கிணைப்பாளர் ஊ.ஜெயராமன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். வழி நடைப்பயணம் ஒன்றிய அலுவலகம், வ.ஊ.சி. திடல், பொது நூலகம் வழியாக சென்று பெரியார் படிப்பகத்தை அடைந்தது அங்கு உள்ள தந்தை பெரியார் சிலைக்கு கழக இளைஞர் அணித் தோழர்கள் சார்பில் மாவட்ட தொழிலாளர் அணித் தலைவர் சிலம்பரசன் மாலை அணிவித்தார். கடைவீதி வழியாக தொடர்ந்து நடைப் பயணம் பாப்பிரெட்டிப்பட்டி பேருந்து நிலையம் அருகே உள்ள தந்தை பெரியார் சிலையை அடைந்தது. அங்கு நிறுவப்பட்டுள்ள தந்தை பெரியார் சிலைக்கு திராவிடர் கழக மாநில மகளிர் அணிச் செயலாளர் தகடூர். தமிழ்ச்செல்வி மாவட்ட மகளிர் பாசறைத் தலைவர் பெ.கல்பனா, மாவட்ட மகளிர் பாசறைச் செயலாளர் த. மு.சுடரொளி, தர்மபுரி விடுதலை வாசகர் வட்ட செயலாளர் சுதா, மாவட்ட பகுத்தறிவாளர் கழக துணைச் செயலாளர் ஜீவிதா, வேப்பிலைப்பட்டி சுசீலா, மருக்காளம்பட்டி கலா, வேப்பநத்தம் அக்சையா, ஆகியோர் இணைந்து பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தனர்.
வழிநடைப்பயணத்தை ஒழுங்குப்படுத்தி திராவிடர் கழக மாநில இளைஞரணி துணைச் செயலாளர் மா. செல்லதுரை, மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர் ராஜேஷ், பகுத்தறிவாளர் கழக பொறுப்பாளர் சிலம்பரசன், சுதா, ஆகியோர் கொள்கை முழக்கமிட்டு சென்றனர்.
இந்நிகழ்ச்சியில் கழகச் சொற்பொழிவாளர் த.மு. யாழ்திலீபன், மாவட்ட இளைஞர் அணி தலைவர் வினோத்குமார், மாவட்ட இளைஞரணி செயலாளர், சஞ்சீவன், மாவட்ட மாணவர் கழகத் தலைவர் சாய்குமார், வித்யாகர், மாவட்ட மாணவர் கழகச் செயலாளர் சூர்யா, மாவட்ட பகுத்தறிவாளர் கழக துணைச் செயலாளர் ராஜவேங்கன், மாவட்ட இளைஞரணி துணைத் தலைவர் தென்றல் பிரியன், மொரப்பூர் ஒன்றிய பகுத்தறிவாளர்கள் தலைவர் அறிவுமணி, கடத்தூர் ஒன்றிய செயலாளர் பச்சையப்பன், பாப்பிரெட்டிப்பட்டி நகர செயலாளர் மணி சக்திவேல், அமைப்பாளர் வினோத், மாவட்ட பகுத்தறிவாளர் கழக பொறுப்பாளர்கள் சமரசம், பிரதாப், இளைஞரணி பார்த்தசாரதி, மொரப்பூர் ஒன்றியச் செயலாளர் வித்யாகர், விஷ்ணு, கடத்தூர் ஒன்றிய இளைஞரணி பாலாஜி, பாப்பிரெட்டிப்பட்டி மாணவர் கழக கவின்நிதி, பொழில்நிதி, வேப்பிலைப்பட்டி மாணவர் சித்தார்த்தன், கவுண்டம்பட்டி மாணவர் சிந்தனையாளன், பாப்பிரெட்டிப்பட்டி மாணவி ம.குரல்பாவை வேப்பிலைப்பட்டி பெரியார் பிஞ்சு யாழ்அமுதினி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
நிறைவாக மாநிலப் பகுத்தறிவு கலைத்துறை செயலாளர் மாரி கருணாநிதி இல்லத்தில் காலை உணவு முடித்து அனைவருக்கும் பதக்கமும் சான்றிதழும் வழங்கப்பட்டன. இறுதியாக ஒன்றிய திராவிடர் கழகச் செயலாளர் பொன் அய்யனார் நன்றி கூறினார்.
